இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Thursday, 31 May 2007

மஹாகவி பாரதி பக்திமானா பகுத்தறிவாதியா?

திரும்பத் திரும்ப தமிழ்க்குள்ளேயே , அதாவது குண்ட சட்டிக் குள்ளயே குதிரை ஓட்டிக்கிட்டு இருப்பதை விட கொஞ்சம் மற்ற விஷ்யங்களையும் பார்ப்போங்களா? ஏன்னா அப்புறம் நம்ம ஜெயகாந்தன் வந்து திடீர்ன்னு, பிரான்ஸ்ல இருக்கற தமிழனும், தன்னைத் தானே நக்கிக்கொள்ற "பிரெஞ்சி நாயிங்க" சொல்லிட போறாரு. என்ன நான் சொன்றது? அது எப்பங்க அப்படி சொன்னாருன்னு? விவரம் தெறிஞ்சவங்க கேட்கமாட்டீங்கன்னு தெரியும். ஆனா இங்க இருக்கிற சில ஜாம்பாவான்களுக்கு அவரைத் தெரியுமாங்கறது கொஞ்சம் சந்தேகம் தான். அதுலேயும் அவருக்கு ஞானபீட விருது கொடுத்ததெல்லாம் தெரியுமாங்கிரதெல்லாம் சந்தேகமே. சரி அது போகட்டும். வீண் வம்பு நமக்கதெக்கு.
நம்ம மஹாகவி பாரதியார் தமிழ்ல பாண்டியத்தையம் பெறுவதற்கு முன்னாலேயே சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பது அனேகம் பேருக்கு தெரியும். அதிலும் பகவத்கீதையை பக்குவமாய் பருகியவன். ஆனால் அதே நேரத்தில் பகுத்தறிவாதத்தினையும் அவன் விடவில்லை என்பதற்கு கீழ்காணும் வரிகளே சாட்சி.

"செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம்

பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்"

சரி அத்வைதியான பாரதி பகவத்கீதைக்கு தான் எழுதிய முன்னுரையிலேயே எப்படியெல்லாம் முரண் பட்டிருக்கின்றான் என்பதை அலசிய கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் சுவாரசியமான விவாதங்களை பார்ப்போம் :

பாரதி அடிப்படையில் ஓர் அத்துவைதி; ஒருமைக் கொள்கையாளன். ஆனால் அத்துவைதத்தின் கொடுமுடியான மாயைக் கொள்கையை அவன் மறுதலிக்கிறான். மாயையைப் பாரதி மறுதலிப்பது அவனுடைய புற உலக நாட்டத்தை, வேத நெறியில் திளைக்கிற அவன்மேல் அவனை உருவாக்கிய தமிழ் நெறி செலுத்திய ஆளுமையை, அவனது மெய்யான பற்றுறுதிகளை, அவற்றை வெளிப்படையாக முன்வைக்கிற அவனுடைய நேர்மையைக் காட்டுகிறது. ஒரு சார்பில் வைதிகனாகவும் மறு சார்பில் அவைதிகனாகவும், ஒரு சார்பில் அகநிலையாளனாகவும் மறு சார்பில் புறநிலையாளனாகவும் இருக்க விரும்புகிறான் பாரதி. இந்த ஈரொட்டு நிலைதான் அவனுடைய வழக்குரைகளில் முரண்களை உண்டாக்குகிறது. அத்துவைதம் பேச விருப்பமென்றால் அதை மாயையோடுதான் பேசியாக வேண்டும். மாயையைப் பேச விருப்பமில்லை என்றால் அத்துவைதம் பேசக் கூடாது. பிரம்மம் முகமென்றால் மாயை முதுகு. 'முகத்தை மட்டும் கொள்கிறேன், முதுகு வேண்டாம்' என்று தள்ளுபடி செய்ய அத்துவைதம் இடம் கொடுக்காது. அத்துவைதம் கலப்படக் கொள்கைகள் செய்வதற்கு ஒத்துவராத விலாங்கு மீன்.
பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரையில் கீதை போதிக்கிற விடயங்கள் என்று சிலவற்றைப் பாரதி வெளிச்சமிட்டுக் காட்டுகிறான். அவற்றில் ஒன்று புத்தியிலே சார்புடையவனாக இருக்கச் சொல்கிறது கீதை என்பது.
"புத்தியிலே சார்பு எய்தியவன் இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது. (கீதை, 2:50)
இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக்கெல்லாம் அடிப்படையாம்." (ப. 3)
அப்படித்தான் சொல்கிறது கீதை.
"தன்னிலே தான் இன்புறுவான் தன்னிலே தான் திருப்தியடைவான். தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான். அவனுக்குத் தொழிலில்லை.
"அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை. செயலின்றியிருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை. எவ்விதப் பயனையும் கருதி அவன் எந்த உயிரையும் சார்ந்து நிற்பதில்லை." (கீதை, 3:17-18).
கீதை இப்படியும் சொல்கிறது:
"சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் ஸித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதியடையான்.
"ஆதலால், எது செய்யத் தக்கது, எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்." (கீதை, 16:23-24)
மேலும் சொல்கிறது:
"உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்வி செய்க. என்னையே வணங்குக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே; உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.
"எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண்புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே." (கீதை, 18:65-66)
கீதையின் இந்த முரண்பாடு பாரதியின் முன்னுரையில் எதிரொலிக்கிறது. புத்தியிலே சார்பு கொள்ளுதலை யோகமென எடுத்துச் சொன்ன பாரதி மற்றோரிடத்தில் பேசுகிறான்:
"கடவுளிடம் தீராத நம்பிக்கையைச் செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். வாயிலாலேனும் புறவாயிலாலேனும் நமக்கு எவ்வகைத் துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண்புகுந்துவிட்டோ மாதலின்.
"அவனன்றி யோரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான்... ஏன்? நாம் அவனை முழுதும் நம்பிவிட்டோ மாதலின். ...
"அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? ... எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.
" 'ஸம்சயாத்மா விநச்யதி' - ஐயமுடையோன் அழிவான். நம்பினவன் மோக்ஷமடைவான்." (பக். 15-16)
இப்போது நமக்கெழுகிற ஐயம்: புத்தியிலே சார்பு கொள்வதா? "சாஸ்திர"த்தில் சார்பு கொள்வதா? கடவுளிடத்தில் சார்பு கொள்வதா? மூன்றில் எதன் ஒன்றின் மீதும் சார்பு கொள்ளச் சொல்வதும் வழக்குரைக்குப் பிழையில்லை. ஆனால் ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொன்றின் மீது சார்பு கொள்ளச் சொல்வது?
ஐயமுடையோன் அழிவான் என்பது சரி. 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து' என்பது உள்ளதுதான். ஆனால் எதன்மேல் ஐயமுடையவன் அழிவான்? புத்தியின் மேலா? சாஸ்திரத்தின் மேலா? கடவுளின் மேலா? ஐயம் என்பதே அறிவின் தொடக்கமன்றோ! ஐயத்தில் தொடங்குகிறவனை முதலிலேயே அச்சுறுத்திவிட்டால் அவன் தொடர்வானோ! ஐயத்தில் தொடங்குவதும் பிறகு அது நீங்கித் தெளிவதும் தானே முறை! மேலும் செய்கையினாலும் செயலின்மையினாலும் எந்தப் பயனுமில்லாதவன் எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்தான் என்ன? சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டு சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய் என்று அவனை கடப்படுத்துவது ஏன்?
ஓரிடத்தில் அனைத்திறைக் கொள்கை (pantheism) பேசுகிறான் பாரதி. அதுவே வேதத்தின் கொள்கை என்றும் அதை விளக்கும் பொருட்டே பகவத் கீதை செய்யப்பட்டது என்றும் பேசுகிறான்.
" 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் ஸித்தாந்தம். எல்லாம் கடவுள்மயம். ... [ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம்.] ...
"நக்ஷத்ரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்ரத்தில் ஆடுகின்றன. நீ அவன்; உன் மனம் உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே. ... அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஸந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? ... உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்ரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வஹித்துக்கொள்கிறாய்?
" ... எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று ஸமர்ப்பித்துவிட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலைமீது நீர் போலே (கீதை, 5:10).
"சால நல்ல செய்தி யன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு? பாவத்தைச் செய்யாமலிருக்க வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே, உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கிறான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செய்யப்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது." (பக். 6-9)
எல்லாமே கடவுள் மயம் என்று பாரதி அனைத்திறைக் கொள்கை பேசுவதில் ஒரு நியாயம் உண்டு. எல்லாமே கடவுள்மயம் என்றால் பின் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவேது! பார்ப்பான் என்றும் பறையன் என்றும் வேறுபாடு ஏது! பாரதியின் உள்மன விருப்பம் அதுதான். அது நல்லது. ஆனால் பகவத் கீதை அத்தகைய நிலைபாட்டுக்கு உகந்த நூல்தானா? அருச்சுனன் தன்னுடைய துயரப்பாட்டை வெளிப்படுத்தத் தொடங்கும்போதே, "இந்தப் போரினால் வருண தருமம் குலைந்து போய்விடுமே" என்ற வருத்தத்துடன்தான் தொடங்குகிறான். அதற்கு விடை சொல்ல முனைகிற வாசுதேவ கிருட்டிணன், "சாத்திரத்தில் உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலை நீ செய்ய வேண்டுவது உன் கடன். நீ சத்திரியன்; போர்த் தொழில் செய்யவே விதிக்கப்பட்டிருக்கிறாய். எழுந்து நில். போர் செய்" என்று வருண தருமத்தைக் காப்பாற்றவே போர் செய்யச் சொல்கிறான்.
மேலும் கிருட்டிணக் கடவுள் அவனே சொல்வதுபோலத் தனக்கு இனியவர்களுக்கும் தன்னைச் சரண் புகுந்தவர்களுக்குமே இனியவன். இது பத்தி இயக்கத்தின் பொதுத் தன்மை. சிவன்கூட நச்சினார்க்குத்தான் இனியவன். மற்றையோர்க்கு இவர்கள் வெய்யவர்கள். அப்படியானால் எல்லாமே கடவுள்மயம் என்பதும் எல்லாரும் சமானமானவர்கள் என்பதும் எப்படிச் சரி?
அது ஒருபுறம் கிடக்கட்டும். "சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு?" என்று பாரதி விதந்தோதும் அளவுக்கு இதில் பேசப்படுகிற நல்ல செய்தி என்ன? "என் செயலாவதொன்றிலை, இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்" என்று கருதிக்கொண்டு எதைச் செய்தாலும் அதன் நன்மையோ தீமையோ நம்மை ஒட்டாது என்பது நல்ல செய்திதானா? இது நல்ல செய்திதான் என்றால் இதைத் தற்கால வாழ்விற்கும் பொருத்திப் பார்க்க வேண்டாமா!
தேர்தல் நடக்கிறது. தன் கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த தொண்டனுக்கும் தருமம். "சாஸ்திர விரோதமான செயலை ஒருவன் செய்யக் கூடாது" என்பதைப் போலக் கட்சி விரோதமான செயலைத் தொண்டன் செய்யக் கூடாது. தன் கட்சியை மக்கள் வெல்லச் செய்வார்களா என்பதைக் கட்சியின் நடத்தையைப் பொறுத்துக் கணிக்க முடியாத சூழலில், தன் கட்சி வென்றேயாக வேண்டும் என்ற கட்டாய நிலையில், அவன் தான் போற்றுகிற தன் தலைவனின் மேல் பொறுப்பைப் போட்டுவிட்டுக் குடிபடையுடன் உட்புகுந்து கள்ள ஓட்டுப் போடுவதும் சால நல்ல செய்தியோ?
செயலுக்குச் செய்தவனைப் பொறுப்பாக்குவது என்பது அற நூல்களின் அடிப்படை. "நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே" என்பது ஆவியிலே தாழ்மையைக் குறிப்பது என்ற அளவில் நல்லதே தவிர அதையே விதியாகக் கொள்கிற அளவுக்கு நல்லதா?
எல்லாவற்றையும் இறைவனின் பொறுப்பில் வைத்துவிட்டுத் தான் பொறுப்பின்றி இருத்தல் என்பது புறச் சமயங்களான பௌத்தத்தையும் சமணத்தையும் வென்று அகச் சமயங்களான சைவத்தையும் வைணவத்தையும் நிலைநாட்டுவதற்காகச் செய்யப்பட்ட உத்தி. இது பாதை மாறிய ஆடுகளைப் பட்டிக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கையூட்டு.
"வினையே நமது கருக்குழி; உறற்பால ஊட்டா கழியா" என்று கெடுபிடியாகப் பேசியது பௌத்தம். "வினை உன்னுடையது அல்ல; கடவுளுடையது. உன் வழியாகக் கடவுளே அதைச் செய்கிறார். ஆகையால் ஆக வேண்டியவற்றை அவர் பார்த்துக் கொள்வார். உன்னுடைய செயல்களுக்கு உன்னைப் பொறுப்பாக்கும் பௌத்தத்திலிருந்து, உன்னுடைய செயல்களுக்குக் கடவுளே பொறுப்பேற்றுக்கொள்ளும் சமயத்திற்கு (சைவத்துக்கு அல்லது வைணவத்துக்கு; பகவத் கீதையின் விடயத்தில் சைவமோ வைணவமோ அல்லாமல் வேத மதத்துக்கு) மீட்சி பெறு" என்று நீக்குப்போக்காகப் பேசியது பத்தி இயக்கம். அவ்வளவுதான் வேறுபாடு. கையூட்டாக முன்வைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சிக் கொள்கையைப் பாரதி பரிந்துரைப்பதைப் போலப் பொதுக் கொள்கையாக, சால நல்ல செய்தியாக ஏற்றமைய முடியுமா? ஏற்றால் சமூக ஒழுங்கு நிலைபெறுமா? அறிவின் அடிப்படையில் பார்த்தாலும் இது உயிருக்கோ இறைவனுக்கோ பெருமை தருவதாக அமையுமா?
பகவத் கீதையை 'அமிர்த சாஸ்த்ரம்' என்கிறான் பாரதி.
"சாகாதிருத்தல்; மண்மீது மாளாமல் மார்க்கண்டேயன்போல் வாழ்தல்; இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை; இஃதே வேத ரஹஸ்யம்.
"இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.
"இறந்துபோன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவர்களாகவே கருதப்படுதல் வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப்போல் வாழ்வாரே ஜீவன்முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் ஸாத்யமென்று ... இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதித்திருக்கிறார். இஃது ஸ்ரீகிருஷ்ணருடைய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் ஸாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்த்ரம்." (பக். 16-17)
சாகாதிருக்கும் மார்க்கண்டேயன் இப்போது எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரியவில்லை. சாகாதிருக்கத் தகும் தீரனாகக் கிருட்டிணனும் இல்லை. ஒரு கல்லா வேடனின் அம்பில் அடிபட்டுக் காலமானான்.
சாகாமையைப் போதிப்பதாகப் பாரதி மேற்கோள் காட்டும் இரண்டு சுலோகங்களை (கீதை, 2:14-15) அடுத்து அதே அத்தியாயத்தில் கீழ்வரும் சுலோகங்களும் இடம்பெறுகின்றன:
"ஆத்மா நித்யன்; அழிவற்றான்; அளவிடத் தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ..." (கீதை, 2:18).
"பிறந்தவன் சாவ துறுதியெனில், செத்தவன் பிறப்பதுறுதியெனில், இந்த விலக்கொணாச் செயலுக்கு நீ அழுங்குதல் தகுதியன்று" (கீதை, 2:17).
பகவத் கீதை பேசுகிற சாகாமையைப் பாரதி விளங்கிக்கொண்ட விதம் சரிதானா? "நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப்போல் வாழ்வாரே ஜீவன் முக்தராவர்" என்பது பாரதியின் கொள்கையேயன்றிப் பகவத் கீதையின் கொள்கையன்று. பாரதி இந்த "மரணமிலாப் பெருவாழ்வுக் கொள்கையில்" ஊக்குவிக்கப்பட்டதற்குக் காரணம் தமிழ்ச் சித்தர்களும் வள்ளலாருமேயன்றிச் சிறீகிருட்டிணன் அல்லன்.
பாரதி தொடர்ந்து பேசுகிறான்:
"... சாகாமலிருக்க வழி கற்றுக்கொடுக்கும் சாஸ்த்ரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துர்யோதனாதிகளைக் கொல்லும்படி அருச்சுனனைத் தூண்டுவதற்காகவே இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்தவிடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை ஸத்வ குணமும், இத்தனை துக்க நிவிர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச் சில மூடர் கருதுகின்றிலர்.
"துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அருச்சுனன் ஜீவாத்மா; ஸ்ரீகிருஷ்ணன் பரமாத்மா.
"இந்த ரஹஸ்யம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது." (ப. 17).
இங்கே இப்படிப் பேசுகிற பாரதி பின்னோரிடத்தில் பகவத் கீதை துறவு நூலன்று என்று வலியுறுத்தும் வகையில் ஒரு விளக்கம் சொல்கிறான்:
"...கீதையைக் கேட்டவனும் ஸந்நியாசியல்லன்; சொன்னவனும் ஸந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர்; குடும்ப வாழ்விலிருந்தோர். 'ஆஹா! அஃதெப்படிச் சொல்லலாம்? அருச்சுனன் ஜீவாத்மா வென்றும் கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்னே?' எனில்-வேண்டா; அதனை விட்டுவிடுக." (பக். 25-26).
அதனை விட்டுவிடுவோம். கீதை கொலை நூலன்று என்பதற்குப் பாரதி மற்றொரு வழக்குரையையும் முன்வைக்கிறான்:
"ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நிதிகளாகக் கருதப்படும் ப்ரஸ்தானத் த்ரயங்களாகிய உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த ஸூத்ரம்-என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்தச் சில மூடர் மறந்துவிடுகின்றனர். இதற்கு-அதாவது, பகவத் கீதைக்கு-சங்கரர், ராமானுஜாசார்யர், மத்வாசார்யர் என்ற மூன்று மத ஸ்தாபகாசார்யரும் வ்யாக்யானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள் என்பதை இந்த மூடர் அறிகிலர். கொலைக்குத் தூண்டும் நூலொன்றுக்குச் சங்கராசார்யர் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக் கருதி தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.
"கொலை எவ்வளவு தூரம்! பகவத்பாத சங்கராசார்யார் எவ்வளவு தூரம்!" (ப. 20)
பாரதியின் இந்த வழக்குரை மிகவும் பொக்கையாக இருக்கிறது. சங்கராச்சாரியாருக்கும் கொலைக்கும் எவ்வளவு தூரம் என்பது ஒருபக்கமிருக்கட்டும். கொலையை நியாயப்படுத்துகிற ஒரு நூலைப் பகவான் சிறீகிருட்டிணன் உபதேசிப்பான் என்றால், அந்த நூல் காலங்காலமாக நியாயப்படுத்தப்பட்டு, இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் ஒன்றாக வைக்கப்படும் என்றால், அதற்குச் சங்கராச்சாரியார் உரை எழுதுவதில் என்ன தடை? சங்கராச்சாரியார் உரை எழுதியதனாலேயே இது கொலை நூலாகாமற் போய்விடும் என்று எப்படிச் சொல்வது?
இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் இரண்டாவது கீதை; ஆகையினால் அது கொலை நூலாக இருக்க முடியாது என்ற வழக்குரையிலும் உள்ளீடில்லை. அளவையியலில் 'வட்டத்திற்குள் வழக்குரைத்தல்' என்றொரு குறைபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார்கள். கடவுள் இருக்கிறாரா என்றால், இருக்கிறார். எவ்வாறென்றால், வேதத்தில் கடவுள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதால். வேதம் உண்மையா என்றால், உண்மைதான். எவ்வாறென்றால், அது கடவுளின் வாக்கு என்பதால். கடவுளால் சொல்லப்பட்டதால் வேதம் உண்மை. வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் கடவுள் உண்மை. அதைப் போன்றதுதான் 'இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் இரண்டாவதாகக் கீதை இருப்பதால் அது கொலை நூலாக இருக்க முடியாது' என்பதும்.
கொல்லாமை, கொல்லாமை என்று ஒரு பக்கத்தில் பேசுகிற கீதை அருச்சுனனைப் போருக்குத் தூண்டியதன் மூலம் கொலையையே நியாயப்படுத்தியது.
"எந்த ஜந்துவுக்கும் ஹிம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த் தொண்டர் ஆகார். ... மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வவதை செய்வோரேயாவர்" என்று பாரதி தன் முன்னுரையில் சொல்கிறான் (ப. 24).
பகவத் கீதையும் இதைப் பேசுகிறது. ஆனாலும் அது போகிற போக்குக்குப் பேசிய துணைப் பேச்சுத்தானேயன்றி அதுவே நூலின் மையமன்று.
"அர்ச்சுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும் தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழியவேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆத்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால் நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம், அதுவும் ஈச்வரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ..." என்று கண்ணன் அருச்சுனனுக்குச் சொன்னதாக இரண்டாம் அத்தியாயமான "ஸாங்க்ய யோகத்துக்கு" பாரதி முன்னுரை எழுதுகிறான் (ப. 46). 'உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும்' என்று கொலைக்கு ஊற்றமாகிற போர்த் தொழிலையே கிருட்டிணன் சுட்டுகிறான்.
உடற் கழுதனையோ உயிர்க் கழுதனையோஉடற் கழுதனையேல் உன்மகன் றன்னைஎடுத்துப் புறங்காட்டிட்டனர் யாரேஉயிர்க் கழுதனையேல் உயிர்புகும் புக்கில்செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியதுஅவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடிஎவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்
என்று மணிமேகலை, மகன் உதயகுமரனை இழந்து வருந்திய அரசமாதேவிக்குப் பேசியபோதும் உடலின் நிலையாமையும் உயிரின் நிலைமையும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தக் கருதுகோள் மணிமேகலையில் அன்பிற்குத் தூண்டலாகிறது. பகவத் கீதையில் கொலைக்குத் தூண்டலாகிறது.
ஆன்மாவுக்குச் சாவில்லை. உடல் என்பது ஆன்மாவுக்குச் சட்டை. ஒரு சட்டை கிழிந்துபோனால் வேறொரு சட்டை அதற்குக் கிடைக்கும். ஆகையினால் இந்தச் சட்டையைக் கிழிப்பதைப் பற்றி நீ வருத்தப்பட வேண்டாம். எல்லாம் சரி. ஆனால் ஆன்மாவுக்கு வாய்த்திருக்கிற சட்டையைக் கிழித்தெறிந்து அது வேறொரு சட்டையைப் பெறும் வலுக்கட்டாயத்தை அதன்மேல் திணிப்பானேன்? ஒரு சட்டை கிழிந்துபோனால் வேறு சட்டை கிடைத்தே தீரும் என்ற நிலையில் இருக்கிற சட்டையை அழிப்பதில் பொருள் என்ன? அது எந்த நோக்கத்தை நிறைவேற்றப்போகிறது? வேறொரு சட்டையைத் தைத்துக்கொடுக்கிற பொறுப்பும் கடவுளுடையதேயல்லவா? அது வெட்டி வேலையேயல்லவா? இந்த வெட்டிவேலைக்குப் பகவான் கிருட்டிணன் அருச்சுனனைத் தூண்டுவது ஏன்? அவனுக்கு இதில் என்ன அக்கறை? கொலை "ஈச்வரனுக்கு" அத்தனை பிரீதியானதா? இவையெல்லாம் கடவுளின் இலீலைகள் என்றால் கடவுளுக்கு வேறு வேலையே இல்லையா?
கொல்வதால் பிழைகள் நேர்படுமா? இருத்துவதால் அல்லவோ நேர்படும்! இருந்துணரலாம்; இறந்துணர முடியுமோ?
"... ஆதலால் பார்த்தா, போர் செய்.
"இவன் கொல்வானென்று நினைப்போனும், கொல்லப்படு வானென்று நினைப்போனும்-இருவரும் அறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை.
"இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. ... இவன் பிறப்பற்றான்; அனவரதன், இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப் படுகையில் இவன் கொல்லப்படான்." (கீதை, 2:18-20).
இந்த நியாயப்பாட்டின் அடிப்படையில் கொலை பாவமன்று என்ற முடிவுக்கே நாம் வந்துசேர வேண்டியிருக்கிறது. கீதையைக் கொலை நூல் என்று சொன்னால் அதில் பிழையென்ன?
"... நீ இந்தத் தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்று பாவத்தை யடைவாய்.
"உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோ ன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலும் கொடிதன்றோ?" (கீதை, 2:33-34).
"யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது" என்பதை அறியாதவனல்லன் பாரதி.
பாரதியின் முன்னிருந்த தேவை போருக்கு முடுக்குவதேயன்றிப் போரை ஒடுக்குவதன்று. ஆகையால் அவன் பகவத் கீதையைச் சரணடைந்தான். பாரதியைக் குற்றம் சொல்ல முடியாது.

Monday, 28 May 2007

தமிழ்ப் பணி? 2

மாங்க பின்ன எப்படி தாங்க தமிழ்ப் பணி செய்வது? நம்ம இசை ஞானி இளையராஜா செய்வது போல் தமிழ்ப் பணி செய்யவேண்டும். இன்னாங்க அது அவர் திரைப்படத்திற்கு இசை தானே போடுறதா சொன்னாங்க, தமிழ்ப் பணியெல்லாம் எப்படின்னு? தானே பார்க்கின்றீர்கள். சொல்லிட்டாப் போச்சி.
சுத்தி சுத்தி தமிழ், தமிழன் என்றாலே அடுத்து வருவது பெரியார் அவர்கள் தான் இல்லையா? அதையும் விட தமிழ் எழுத்துச்சீர்மை என்று சொல்லே 1935 ஆம் ஆண்டு பெரியார் மும்மொழிந்ததிலிருந்து துவங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதாவது "லை" என்பதை முன்பு "ல" என்ற எழுத்துடன் ஒரு கொம்பை சேர்த்து எழுதும் வழக்கத்தை மாற்றி இப்போதுள்ள "லை"யை நமக்களித்தவர் பெரியார். ஆனால் பிராமண்ய ஆதிக்க சக்திகள் அதை ஏற்காமல் இருந்ததற்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணத்திற்கு கெ.பாலச்சந்தர் எடுத்த வானமே எல்லை படத்தின் பெயரை அவர் பழைய கொம்பு போட்ட "லை" யுடன் எழுதி தன்னுடைய பெரியாரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார். பாலச்சந்தர் அவருடைய இன ஒற்றுமையை எப்படி காண்பிக்கிறார் என்று பாசிட்டிவ்வாக எடுத்துக்க கொள்ளலாம். துக்ளக்கும் அப்படியே.
ம்முடைய இளயராஜாவோ தன் தமிழின உணர்வை காண்பிக்க என்ன செய்திருக்கவேண்டும். மாபெரும் பாக்கியமாக கருதி பெரியாரின் திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கவேண்டும். அனால் அப்படி சேய்யாதது மட்டுமல்லாமல் அதற்கு அவர் சொன்ன காரணம் "என் ஆன்மீகக் கொள்கைகளுக்கு முரணானது பெரியாரின் நாத்திகவாதம். எனவே என்னால் இசையமைக்க முடியாது" என்று திருவாய் மொழிந்தார். அதாவது இளையராஜவுக்கு, பெரியார் என்றால் ஒரு நாத்திகவாதி, ஒரு கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமெ தெரிந்திக்கிறது என்றால் இளையராஜவின் சமூகப் பார்வையில் உள்ள ஊனத்தின் அளவை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ளையராஜாவின் மகள் தமிழ் சினிமா பாடலகள் பாடும் போது அப்பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதிவைத்து தான் பாடுவார் என்று தெரிந்தும் அதைப்பற்றி யாராவது கேட்டோமா? அல்லது இளையராஜாவின் பால்ய நண்பர் , "என் இனிய தமிழ் மக்களே"ன்னு வழிவாரே, அவரது ஒரே மகன், தமிழகத்தில் நடந்த ஒரு மாபெரும் மேடை நிகழ்ச்சியின் போது கலைஞருக்கு முன்னாலேயே தன்னால் தமிழில் பேச முடியாது என்று சொல்லி, அதே இனிய தமிழ் மக்களின் மூகத்தில் கரியை பூசியதைப் பற்றி இப்பொது பேசப் போவதுமில்லை.
னால் வைகைக் கரை மணலில் உட்கார்ந்து பாடப்பட்ட மாணிக்க வாசகரின் திருவாசாகத்தை இசைவடிவம் கொடுத்த இளையராஜாவுக்கு ஏன் தமிழ்நாட்டில் ஒரு இசைக் கலஞன் கூட கிடைக்கவில்லை. இத்துணை ஆண்டுகளுக்கு கழிந்த பிறகும் ஒரு தமிழன் பாடிய பாட்டிற்கான இவரின் சிம்பொனி இசையை வாசிக்க தமிழ் வாத்தியக் கலஞர்கள் கிடைக்காத போன ரகசியம் என்னவோ?
ன்றைக்கு தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமான சிலரில், மிக மிக்கியமான தலைவராகிய பெரியாரின் படத்திற்கு இளையராஜாவால் இசையமைக்க முடியாவிட்டால், பின் எப்போது தமிழுக்கு தொண்டு செய்யப் போகிறார். எவ்வளவு முறை முயன்றும் அவரது சாதியின் காரணத்தால் சங்கரமடத்தின் உள்ளே விடாமலும், தமிழை "நீச பாஷை" என்று கூறி, ஒவ்வோரு முறையும் தமிழ் பேசிய பின்பும் , நீரில் குளித்து தீட்டை போக்கிக் கொள்ளும் சங்கராச்சாரி பேசும் ஸ்ம்கிருதம் தான் இளையராஜாவின் தாய்மொழியோ ?
நாலு காசு சேர்ந்து விட்டாலோ, நாலு எழுத்து படித்து விட்டாலோ தமிழர்காளாகிய நாம், முதலில் செய்வது நம்மை தமிழர்களாக இனம் காட்டிக் கொள்ளாமல் இருப்பது. தமிழில் பேசுவதையே கேவலமாக எண்ணுவது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எதோ தாங்கள் வெள்ளைக் காரனுக்கே பிறந்தது போல் நினைத்துக் கொண்டு நடப்பது. சரி அது போகட்டும்.
மஸ்கிருத வல்லுனராகவும் சென்னை மாகாண முதல்வாராகவும் இருந்த பனகல் அரசர் என்ன செய்தார் என்று நம்ம இளையராஜாவுக்கு சொல்வோமா? சுமார் எண்பது வருடத்திற்கு முன்னால் சென்னை மாகாணத்தில் நிலவிய ஒரு சட்டத்தை திருத்தம் செய்ததாலேயே அவரது பெயர் காலத்தை வென்று நிற்கிறது. அப்படி என்னாங்க ஒரு சட்டம்? ஆமாங்க அப்படி ஒரு சட்டம் அது. அதாவது எண்பது வருடத்திற்கு முன்னால் மருத்துவக் கல்லூரியில் நீங்கள் சேரவேண்டும் என்றால், இப்பொது போலவே நுழைவுத்தேற்வு எழுதித்தான் சேரவேண்டும் . யோவ் அதுல உனக்கு இன்னாய்யா பிரெச்சனை தானே கேட்குறீங்க ? அதுல தாங்க பிரெச்சனையே. நுழைவுத்தேர்வுல ஒரு பாடம் சம்ஸ்கிருதம். அதுலேயும் பாஸ் பண்ணாத்தான் மருத்துவம் படிக்கலாம். அப்ப எவனெவன் மருத்துவம் படிச்சிருப்பான்னு யோசிக்க முடியுதுங்களா ?
தை கவனிச்ச பனகல் அரசர், ஒரு சின்ன சட்ட திருத்தம் கொண்டுவந்தார். வச்சாரு பாருங்க சம்ஸ்கிருதத்திற்கு ஒரு ஆப்பு. நுழைவுத் தேர்வுலேர்ந்து சம்ஸ்கிருதத்தை நீக்கினார். அப்போதிலிருந்து தான் தமிழகத்தில் தமிழன் கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆரம்பித்தான். பனகல் அரசர் அன்னறைக்கு யோசிக்காமல் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் எச்சிலையை இளையராஜாவைப் போல் நக்கிக்கொண்டு இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் தமிழனின் நிலை? அதோகதிதான். அர்ச்சனை தட்டு வாங்கினாத்தான் ஆப்ரேஷன்னு சொல்லியிருப்பானுங்க. இல்லன்னா காயாத்ரி மந்திரத்தை கண்ணைமூடிகிட்டு சொன்னால் தான் கண்ணாப்பிரேஷன்னு சொன்னாலும் சொல்லியிருப்பானுங்க.
தொண்டுன்னா, இப்படி செய்யுனும் தமிழுக்கு தொண்டு, தமிழன் தலைநிமிர்ந்து நிக்கிற மாதிரி. வேடந்தாங்கலுக்கு தண்ணியைத் தேடிவரும் வெளிநாட்டுப் பறைவகள் போல வெளிநாடுகளுக்கு தண்ணி தேடி வரும் அரசியல்வாதிகளுக்கும் விஐபிக்களுக்கும் வேடந்தாங்கலாக இருப்பது இல்லை தமிழ்த்தொண்டு.
ன்றைக்காவது ஒரு நாள் இளையராஜா தமிழுக்கு திரும்பக் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
ஞ்சாவூர்ல பார்பனர்களின் பூநூலை அறுத்ததிற்கே மூக்கை சிந்தின எங்க "பட்டிமன்ற நட்டுவாங்க மேதை"க்கு இந்த பனகல் அரசர் போட்ட சட்டம் தெரிஞ்சவுடனே பார்பனர்களின் பொழப்பிலேயே மண்ணைப் போட்டுடாங்களேன்னு, ஓஓன்னு அழப்போறாரு பாருங்க...ஹி ஹி
டுபாகூர் தமிழ்ப் பணி தொடரும்...

தமிழ்ப் பணி?

பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் செய்துவரும் தமிழ்ப் பணிகள் என்னென்ன என்று திரு.ஆலன் ஆனந்தன் போட்டுக் கொடுத்துள்ளதை கவனிப்போம். இந்த வருட தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் மலரில் "ஆன்றோர் பெருமக்களாகிய பிரான்சு தமிழ் சங்கத்தினர்கள் தமிழ் மொழியை எப்படி போற்றுகின்றனர்" என்பதை இவர் எப்படி குறிப்பிடுகிறார் ?


"இந்தியாவிலிருந்து பிரான்சு வரும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், இலக்கிய வாதிகள் இவர்களுக்கு இங்குள்ள பிரான்சு தமிழ் சங்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும், வேடந்தாங்களாகவும், விருந்து படைப்பவர்களாகவும், சுற்றுலா ஏற்பாட்டாளர்களாகவும் இருந்து செயல்படுவார்கள். இவர்களின் செயலினிற்கு எவ்வித கைம்மாறும் கருதாது செய்திடும் பாங்கு பாராட்டத்தக்கது".


இப்பப்புரியுதா தமிழ்ப்பணி என்றால் என்னவென்று. அதுவும் இவர்கள் வெளியிடும் மலிரேலேயே இவர்களைப் பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்வது. பாவம் என்ன கோபமோ தெரியவில்லை இப்படி போட்டுக் கொடுத்துவிட்டார் ஆலன் ஆனந்தன். அவருக்கு நமது நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும்.


இதை விட சற்று மேலே சென்று விட்டார்கள் "விர்ச்சுவல்" பிரான்ஸ் சிவன் கோவில் கழகத்தார். அவுங்கத் தலைவருக்கு அவுங்களே பட்டம் கொடுத்துக்குவாங்க. இப்படி ஒரு கேவலத்தை வேறு எங்காவது கண்டதுண்ண்டா ? இங்குள்ள சங்கங்கள் எது செய்தோ இல்லையோ? பட்டம் கொடுப்பதில் மாமன்னர்கள். போட்டிபோட்டுக்கொண்டு கண்டவனுக்கெல்லாம் பட்டம் கொடுக்குறாங்க. பிரான்ஸ் சிவன் கோவில் என்று சொல்லிக்கொள்ளும் கூரையில்லாத அந்த கோவிலில் எப்படி தமிழ் பணி செய்கிறார்கள் என்று ஒரு முறை பார்ர்க நெர்ந்தது. அதாவது திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் அந்த கண்ட்றாவி நடந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா எழுதி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துரையால் பரிசு அறிவிக்கப்பட்ட "நீலக்கடல்" புத்தகத்தை அந்த விழா மண்டப வாசலில் விற்றுக்கொண்டிருந்தார், யாரோ ஒரு பிரான்ஸ் சிவன் கோவில் கைத்தடி. நல்ல சேவை செய்கிறார்களே என்று நானும் ஒரு புத்தகம் வாங்க தலையை கூட்டத்தினுள் தலை நுழைத்தேன். ஐயா ஒரு புத்தகத்தின் விலை என்ன வென்று கேட்டேன். அதற்கு அவர், "எங்களுக்கு அடக்க விலை ஏழு ஈரோக்கள். அதற்கு மேல் மூன்று ஈரோ இலாபமாக வைத்து பத்து ஈரோக்களுக்கு இங்கு விற்கின்றோம்" என்றார். மேலும் அவர் சொன்னது, "நீங்கள் அதற்கு மேலும் அதாவது பத்து ஈரோக்களுக்கு மேலாக எதாவது அன்பளிப்பாக கொடுத்தாலும் வாங்கிகொள்வோம்" என்றார். வாங்குபவர்கள் பெயர் போட்டு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பதையும் குறித்து வைத்திருந்தார். பல பேர் பத்து ஈரோக்களுக்கு மேலாக கொடுத்தே வாங்கியிருந்ததை எல்லோர் பார்வைக்கும் வைத்திருந்தார். நான் எப்பொதும் போல் வெண்ணாந்தையாக அந்த கைத்தடியை பார்த்து, "இப்படி அன்பளிப்பாக வரும் பணத்தை விழாவிமn முடிவில் நாகரத்தினத்திற்கு பணமுடிப்பாக கொடுப்பீர்களா?" என்று கேட்டேன். சர்வசாதரணமாக இல்லை என்றார். அப்படியென்றால் இந்த அன்பளிப்பு யாருக்கு? என்றேன். கைத்தடியிடம் பதில் இல்லை. இக்கேள்வியை நான் கேட்பதை பார்த்துகொண்டிருந்த மற்றவர்கள் உடனே அந்த கைத்தடியிடம் சென்று தாங்கள் அதிகப்படியாக கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.


எவனோ ஒருத்தன் நூறு புத்தகங்களுக்கு மேல் படித்து ஆராய்ச்சி செய்து ஒரு வரலாற்று புதினத்தை இரெண்டு மூன்று வருடங்களாக எழுதி வெளியிடுவான். அவனுக்கு விழா எடுக்கிறோம்முன்னு சொல்லிகிட்டு அங்கும் வியாபார சிந்தனையோடு செயல்படுவது தான் இவர்கள் தமிழ்ப் பணி. கோவில் பெயரைச் சொல்லி அர்ச்சனைத் தட்டு வித்து பொழைக்கிறதை பற்றி உங்களை யாராவது கேட்டோமா? அல்லது கேட்கத்தான் முடியுமா ? அறிவில்? சிறந்த பக்திமான்கள் அவர்களாகவே வந்து அர்ச்சனைத் தட்டு வாங்கி எமாந்து போவதை நாம் கேட்கப் போவதில்லை. யாருக்கோ பாராட்டு விழா ஆனால் நாங்கள் உங்களுக்கு மொய் எழுத வேண்டும். வெட்கமாயில்லை.


பெண்களின் முன்னேற்றத்தை பற்றிய பட்டிமன்றத்தின் நடுவர், தமிழ்நாட்டில் பெண்கள் விடுதலைக்காகவும், பெண்களின் கல்விக்காகவும் பாடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று, அந்த பெண்களாலேயே "தந்தை" என்ற அடைமொழி வழங்கப்பெற்ற, பெரியாரை, ஆண்மையில்லாதவன் என்றும், பெரியாருக்கு பிள்ளையே பிறக்கவில்லை என்றும் வாதாடினார். ஆனால் அந்த பட்டிமன்ற தலைவருக்கு ஈ.வே.ரா பெரியாருக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததும், அப்பெண் குழந்தை ஐந்து வயதில் நோய்வாய்ப் பட்டு இறந்துவிட்டதும் தெரியுமோ? தெரியாது.


ஆனால் அதுவே வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நாக்கூசாமல் சொன்ன சங்கராச்சாரியார் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடத் தெரியும். இவரைப் போன்ற ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகளை வைத்துக்கொண்டு தான் இங்கு தமிழ் வளர்க்கின்றோம்.


மேலும் நான் பாரதி125பிரான்ஸ் விழா செயற்குழு கூட்டத்தில் தலைவர் தசரதனைப் பார்த்து, ஏன் இதுவரை சிதம்பரத்தில் தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கிற்கு தமிழ்ச் சங்க சார்பில் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கேட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது மேலே சொன்ன பாட்டிமன்ற நடுவராக இருந்தவர் கூறியது, "அதே மாதிரி தஞ்சாவூர்ல பிராமணர்களின் பூநூல் அறுத்ததுக்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் , என்று. இப்ப புரியுதா அவர் யாருன்னு?


அனால் அதே நேரத்தில் பிரான்சில் உள்ள சில காலணிகள் விற்கும் கடைகளில், காலணிகளில் பாதம் பதியும் இடத்தில் பிள்ளையாரின் படமும், கிருஷ்ணரின் படமும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டதிற்கு கண்டனம் தெறிவித்தீர்களா? என்று இந்த பிரஹஸ்பதிகளிடம் கேட்டால், அதற்கு பதில் கண்டிப்பாக கிடையாது. கண்டனம் தெரிவிச்சால் காசு கொடுப்பங்களா? அப்படின்னா கால்களை கிளப்பிக்கொண்டு ஓடி வருவோம். வெட்கக்கேடு.


தமிழ்ப் பணி !? தொடரும் !!!

Friday, 25 May 2007

தில்லுமுள்ளுகளும் தள்ளுமுள்ளுகளும்-5

ப்படி இந்த நிலைக் கெட்ட மாந்தரைப் பார்த்து மற்றொருவர் வெகுண்டெழுந்த சம்பவம் ஒன்றினையும் இப்போது பார்போம். அதாவது பாரதி125பிரான்ஸ் விழாவிற்கான செயற்குழ அமைப்பதற்காக பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் அனுப்பிதாக சொன்னக் கடிதம் கடைசிவரை கிடைக்கப் பெறாதவர்களில் மற்றொருவர் திரு.கருணாநிதி அவர்கள். இவர் பிரான்ஸிலும் புதுவையிலும் இயங்கிவரும் தமிழர் இல்லத்தினை தோற்றுவித்து சுமார் இருபத்தைந்து வருடங்களாக நடத்தி வருகிறார். இவர் பிரான்சில் முதன் முதலில் புதுவை தமிழர்களுக்கென்று தமிழ் பள்ளிகூடம் ஆரம்பித்து இருபது ஆண்டுகளுக்கு மேல் நடத்தியவர். தமிழ்ப் பணியை தொடர்ந்து இன்னும் செய்து வருகிறார். சரி இவருக்கும் ஏன் கடிதம் கிடைக்கவில்லை ?

வர் ஒரு கடிதம் போட்டாருங்க 25 வருஷத்திற்கு முன்னால். அந்த கடிதத்தின் வேகம் இன்னும் குறையாததால், இவரையும் தவிற்க பாரதி125 விழாத் தலைமை முடிவுசெய்தது. அப்படி இன்னாங்க அது கடிதமுன்னு தானே நினைக்கிறீங்க? அந்த கடிதத்திற்கும் இப்போதைய தலைமை திரு.தசரதன் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்முன்னு தானே உங்களுடைய அடுத்த கேள்வி? சொல்கிறேன் சொல்கிறேன்.

பாரீஸில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் நடந்த சில சித்து விளையாட்டுகளை இப்போது பார்க்கலாம். முதலில் பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழாவின் செயற்குழு அமைப்பை பார்ப்போம்.

பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழாச் செயற்குழு அமைப்பு :

தலைவர் : திரு. திருஞானசம்பந்த மூர்த்தி

துணைத்தலவர் : திரு. லேகல்

பொதுச்செயலாளர்: கருணாநிதி

துணைச் செயலாளர்: இராஜ சூரியர்

பொருளாளர்: சவியே கிரிஸ்தோப்

துணைப்பொருளாளர்: எத்துவால் பக்தா

வெளித்தொடர்பு: ஜமால், தசரதன், பஸ்கால், மன்ன மரைக்கார்

ல்லா கவனிங்க திரு.தசரதன் எதில் உள்ளார் என்று. வெளித்தொடர்பில் நாங்கு பேரில் ஒருவராக. ஆனால் அவர் இந்தியா சென்ற அங்கு செய்தியாளர்களிடம் தன்னை எப்படி கூறிகொண்டார் என்பதைப் பார்ப்போம். மேலும் இந்த செயற்குழு அமைப்பில் திரு.நசீர் என்பவரின் பெயர் எங்குமே காணப்படவில்லை இல்லையா? ஆனால் நசீர் என்பவரும் தமிழ்நாட்டு செய்தி தாள்களில் இடம் பெற்றுள்ளார். எப்படி ?


தினத்தந்தியில் 14.08.1982ல் வெளியான செய்தியை பார்த்தால் பல வேடிக்கைகள் விளங்கும். செய்தியின் தலைப்பு :
பாரீஸ் நகரில்
பாரதி நூற்றாண்டு விழா
ஏற்பாடுகள் தீவிரம்
சில சுவையான செய்திகளை மட்டும் பார்ப்போம்.
"பாரீஸ் பாரதி விழா குழு தலைவர் திருஞானசம்பந்த மூர்த்தி, மன்றக்குழு அமைப்பாளர் தசரதன், நசீர் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்."
"திருஞானசம்பந்த மூர்த்தி, ஜமால், தசரதன், நசீர் ஆகியோருக்கு பாரதி இளைஞர் சங்கத்தின் சார்பில் நல்லபெருமாள் பொன்னாடை போர்த்தினார்."
"பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பாரீஸ் பாரதிவிழா அமைப்பாளர் தசரதன் பேசுகையில், பல்வேறு நாடுகளில் நவம்பர், டிசம்பர், மாதங்களில் பாரதி நூற்றாண்டு விழா நடைபெறும். அவற்றுக்கெல்லாம் சிகரமான விழாவாக டிசம்பர் மாதம் பாரீஸ் நகரில் அகில உலக பாரதி நூற்றாண்டு விழா நடைபெரும்"
இதாங்க தினத்தந்தியில் வந்த செய்திகள். அதாவது பிரான்சில் இருக்கும் போது பத்தோடு பதினொன்றாக வெளித்தொடர்புக் குழுவில் இருந்த தசரதன், இந்தியா சென்றவுடன் விழா அமைப்புக்குழுவின் தலைவராகி விட்டார் என்பது தான் எப்படி? என்று விளங்கவில்லை. அது மட்டுமல்ல தனக்கு நெருங்கியவர் என்ற ஒரே தகுதியை தவிர விழாவிற்கு சம்பந்தமில்லாத நசீருக்கு பொன்னாடைப் போர்த்தி அழகு பார்த்திருக்கிறார்.
இச்செய்தியை பார்த்த பின்னும் சொரனையற்று இருக்க முடியாத கருணாநிதி அவர்கள், சென்னையில் உள்ள பாரதி இளைஞர் சங்கத் தலைவருக்கு எழுதிய காட்டமான கடிதமே கருணாநிதியின் மேல் தசரதன் வகையாறாக்களுக்கு தீராத கோபத்தை உண்டு பண்ணிவிட்டது.
அக்கடிதத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் பார்ப்போம் :
தலைப்பு : பாரீஸ் பாரதி விழாவும் பங்கு கொள்ளாப் பன்னாடைகளும் சென்னையில் பொன்னாடையும்
"பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப் பட்டவர்களின் வரிசையில், நசீர் (நசீருதின்) என்ற ஒரு தமிழரின் பெயரும் நுழைக்கப் பட்டிருப்பது எங்கள் கவந்துள்ளது. செயலாளன் என்ற முறையில், என்னிடமுள்ள உறுப்பினர்கள் பட்டியலிலோ, நன்கொடை தந்தவர்களின் பட்டியலிலோ, அல்லது சீட்டு வாங்கிக் கொண்டு பார்வையாளராக வந்தவர்களின் பட்டியலிலோ மேற் கூறப்பட்ட நசீர் என்பவரின் பெயர் காணப்படவில்லை.
ஒரு வேளை, மலர்க்குழுவின் ஒரு அங்கத்தினரான நண்பர் தசரதன், பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழா அமைப்புக்குழுவின் அமைப்பாளர் என்ற பெயரை தானாகவே தமிழ்நாட்டில் சூட்டிகொண்டு, அகில உலக பாரதி விழாவினைப் பாரீசில் நடத்தப் போவதாக கூறியுள்ள புதிய கமிட்டியில் சேர்ந்துள்ள முதல் அங்கத்தினருக்கு, முன் கூட்டியே பொன்னாடை போர்த்தும் முயற்சியின் முதற்படியோ ? எனவும் நினைக்க வைக்கிறது.
அல்லது செய்தித் திரட்டியவர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட அச்சுப்பிழையோ? அல்லது செய்தியைத் தந்தவர்களின் சொந்த ஆசையோ என்றும் எண்ண வைக்கிறது.
மேற்கூறப்பட்ட நசீர் நண்பர் தசரதனோடு 8 ஆண்டுகளுக்கு முன் நடந்திய பாரீஸ் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தொகையையும், மாண்புமிகு எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தமிழ் வளர்ச்சிக்காக தந்த, தமிழ் தட்டெழுத்து கருவியையும் சுருட்டிக் கொண்டு பிரெஞ்சு நாட்டை விட்டு மறைந்து போனவர் என்பதையும் இன்றும் மறக்காத பாரீஸ் தமிழர்களுக்கும், தியாக உணர்வோடு உழைத்த நல்லவர்களுக்கும் , தமிழ்நாட்டில் பொன்னாடைக்கும் சவத்தின் மீது போட்டு மூட உதவும் வெள்ளாடைக்கும் வித்தியாசமில்லா நிலை நிலவுகிறதோ என்ற எண்ணத்தை உண்டு பண்ணுகிறது. (நசீர் 1976ல் மேற்கூறிய பொருட்களோடு வெளிநாடு சென்றார்) .
அடுத்து, பாரீஸ் விட்டு, இந்தியாவுக்கு கிளம்பும் கடைசி நேரத்தில் பாரீஸ் நூற்றாண்டு விழாக்குழுவை இவ்வினாடியிலேயே கலைத்து விட வேண்டுமெனத் துடித்து, வேகமாக பேசிய நண்பர் தசரதன் சென்னையில் தந்த பேட்டிகளிலும், பாராட்டு விழாக்களிலும், பாரீஸ் பாரதி விழாக்குழுவின் அமைப்பாளர் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு, மேலும் பாரீசில் அகில உலக ரீதியில் நடத்தப் போவதாகக் கூறியுள்ளதின் மாற்றம் நீங்கள் போர்த்திய பொன்னாடையின் பளபளப்பில் ஏற்ப்பட்டதா? அல்லது அமைப்பாளர் என்று அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டபடியால், தந்த ஊக்கத்தினால் ஏற்பட்டதா? என்ற கேள்விகளும் எழச்செய்கின்றன.
எனவே செம்மறியாட்டின் மந்தையில் ஓநாய் புகுந்த கதையாக பாரீஸ் பாரதி நூற்றாண்டு அமைப்புக் குழுவில், பொன்னாடைக்கென புகுத்தப்பட்ட நசீர் அவர்களின் பெயரை நீக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்யக் கேட்டுக் கொள்வதோடு , நண்பர் தசரதன் அமைப்பாளர் என்ற பெயரில் எங்களைக் கலக்காமல் எதேதோ கூறிவருவதற்கு நாங்கள் போருப்பாளர்கள் அல்ல என்பதனை தெறிவித்து கொள்கின்றோம்."
இப்படி போவுதுங்க அந்தக் கடிதம்.
பழைய விஷயங்கள் தெறிந்தவர்களை கண்டு தசரதன் வகையறாக்கள் கிலி பிடித்து ஓடுவதும் அவர்களை தந்திரமாக இவ்விழாவிலிருந்து ஒதுக்குவதும் ஏன்? என்று அனேகமாக இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும் .
இவர்கள் ஒதிக்கினாலும் பரவாயில்லை நாங்களும் விழாவில் பங்கெடுக்கின்றோம் என்று மூன்றாவது செயற்குழு கூட்டத்திற்கு வந்த சிலரை தசரதன் கையாண்ட விதம் மேலும் அவரின் மேல் உள்ள நம்பகத்தன்மையை உடைத்தெறிந்து விட்டது. மூன்றாவது செயற்குழு கூட்டதிற்கு புதிதாக வந்தவர்களில் பேராசிரியர் திரு. லெபோ பெஞ்சமின் மிக முக்கியமானவர். பாரதி125பிரான்ஸ் அமைப்புக் குழுவால் அதிகாரப் பூர்வ அழைப்பை பெற்ற பிரான்ஸ் கம்பன் கழகத்தின் செயற்குழு உறுப்பினர். ஆனால் தமிழார்வலர், மெத்த படித்தவர், புதுவை தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். இவ்வளவு குறைகளுடைய ஒருவரை எப்படி உள்ளே விடுவது என்று தசரதன் யோசித்தரோ என்னவோ, முகத்தில் அடித்தார்போல் நேருக்கு நேராக உள்ளே வரக்கூடாது என்று அந்த வரலாற்று புகழ் வாய்ந்த வார்த்தைகளை உதிர்த்தார்.
அப்படியும் அந்த நிறைகுடம் தலும்பாமல் உணர்ச்சி வசப்படாமல் தலைகுனிந்து நின்றார். பலரின் வற்புறுதலுக்கு பிறகு கூட்டத்திற்கு வந்து உட்கார்ந்த அவரை கடைசிவரை யாரும் சட்டை செய்யவேயில்லை. அவருக்கு ஒரு பதவியை வாங்கிக் கொடுக்க எடுக்கப்பட்ட பலரின் முயற்சியும் தோல்லிவியிலேயே முடிந்தது. மூன்று முதல் பதவிகளை தமிழ்ச் சங்கமே வைத்துள்ளதால் வந்த பிரச்சனையை தவிர்க்கும் வகையில், அப்பதவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சொன்ன கம்பன் கழக தலைவர் கி.பாரதிதாசனை, பேராசிரியர் பன்னீர்செல்வமும் வழிமொழிந்தார். அப்போது வெடித்தது அவர்களின் கோரசான வீராவசனம். அந்த விராவசனத்தை பேசி தங்களது வீரத்தை நிரூபித்தவர்கள் யார் என்று உங்களுக்கெ தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களின் பதவிகள் பின்வருமாறு: தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர். அவர்கள் பேசிய விராவசனம் என்னவென்று சொல்லவில்லையே.... அதாவது அவர்கள் கவிஞர்.கி.பாரதிதாசனையும், பேராசிரியர் பன்னீர் செல்வத்தையும் பார்த்து கேட்டது "எல்லோரும் தேரில் ஏறிக்கொண்டால், தேரை யார் தள்ளுவது ?" என்பது தான் அந்தக் கேள்வி.
அதற்கு மேலும் அங்கு இருக்க மாட்டாமல் "தமிழை மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் உங்களோடு எனக்கு இனி வேலை இல்லை" என்று நா தழதக்க கூறி வெளியேறிய பேராசிரியர் லெபோவைத் தடுக்க அங்கு உட்கார்ந்திருந்த எந்த பெருந்தகைக்கும் தைரியம் இல்லை. பெருந்தகைகள் வரிசையில் முக்கியமானவர்கள் "VIRTUEL பிரான்ஸ் சிவன் கோவில்" நிறுவனர் திரு. முருகையன், துங்கி நகர மன்ற உறுப்பினர் திரு. ஆலன் ஆனந்தன் , பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு. பாரீஸ் பார்த்தசாரதி, பிரான்ஸ் கம்பன் கழக நிறுவனர் / தலைவர் கவிஞர். கி. பாரதிதாசன், பிரான்ஸ் கண்ணதாசன் கழக தலைவர் திரு.சிவபிரகாசம், மற்றும் சிலர்.
இப்படி பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழாவிலும் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவிலும் பலர் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட தசரதன் இந்த பாரதி125பிரான்ஸ் விழாவின் துவக்கத்திலேயே தன்னுடைய நிஜ முகத்தினை காட்ட துவங்கிவிட்டார். மேலும் இவர் இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள செய்தி ஒன்றில் தான் தான் பாரீசில் கம்பன் விழா கொண்டாடுவதாகவும் சில ஆதரமற்ற செய்திகள் உலாவருகின்றன.
இவ்வளவு நடந்த பின்னும் ஒரு தமிழனுக்குக் கூட சூடோ, சுரனையோ வரவில்லையே என்று கவலைப்பட்ட நேரம் வந்தது திரு. கோவி. ஜெயராமனின் இலக்கிய விழாவில் பாரதியின் 125 ஆண்டு விழா அறிவிப்பு.
ஆறுதலாக இருந்தாலும் இப்புது விழாவினால் பிரான்ஸ் தமிழர்களிடையே பிறிவு தான் வலுக்குமேயன்றி ஒற்றுமை ஒருக்காலும் வரா, என்று நினைத்த மாத்திரம் மீண்டும் கவலையே மிஞ்சுகிறது.
ஒன்றுபட்ட பிரான்ஸ் தமிழர்களின் விழாவாக இந்த பாரதி 125 ஆண்டுக் கொண்டாட்டத்தை மாற்றுவதற்கு இருக்கும் ஒரே மாற்று வழி நம்பகத்தன்மை இழந்து நிற்கும் இப்போதைய தலைமை அவராகவே தன்னை விழாக் குழுவிலிருந்து விளக்கிக் கொள்ளவேண்டும் என்பதே அன்றி வேறேதும் இல்லை. பிரான்ஸ் இந்தியத் தமிழர் ஒற்றுமையைக் கருதியும், இளைஞர்களுக்கு இடம் கொடுத்தும், பிரான்சில் உறுவாகவிருக்கும் அனைத்து தமிழ் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு புது, இளரத்தம் பாய வழிவிடுவார் என நம்புகிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
*************************************

Tuesday, 22 May 2007

தில்லுமுள்ளுகளும் தள்ளுமுள்ளுகளும்-4

மீண்டும் வணக்குமுங்க. பாரதியாரின் 125 ஆண்டுவிழாவினை பாரீசில் கொண்டாட திட்டமிட்டுள்ள இந்த வேளையில், இந்தியாவிலிருந்து யாரை அழைக்கவேண்டும் என்பதைப் பற்றி சில தள்ளுமுள்ளுகள் நிலவுகின்ற அதைப்பற்றி சில யோசனைகள்.
பாரதிதாசன் நூற்றாண்டுக்கு பாரீசுக்கு அழைத்து வரப்பட்ட நெடுஞ்செழியனைப் போல் மிகப் பொருத்தமானவரை இப்போதும் அழைத்து வரவேண்டும். அட அது இன்னா மிகப் பொருத்தமானவருன்னு சொல்றன்னு தானே பாக்குறீங்க. அட அமாங்க பாரதிதாசனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் பல பொருத்தங்கள் உள்ளன. இருவரும் பெரியாரின் திராவிட கழக கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டவர்கள். அதெல்லாம் எங்களுக்கு தெரியும் வேறு எதாவது இருந்தா சொல்லுன்னு ஒரு குரல் கேட்கிறதால எப்படி தி.க கொள்கையை அவர்கள் உள்வாங்கி செரிக்கவைத்தர்கள் என்று பார்ப்போம். சாதியை பற்றி படா படா பாட்டெல்லாம் பாடின பாரதிதாசன் தன் பிள்ளைகளுக்கு என்று வரும் போது மட்டும், தேடிப்பார்த்து தான் சேர்ந்த சாதியான செங்குந்த முதலியாரிலேயே பெண் எடுத்து தன்னுடைய கொள்கையை நிலைநாட்டியது போல வேறு எங்காவது கண்டதுண்டா? சாமி சிலைக்கு முன்னால் விழுந்து கும்பிடுவது மட்டுமல்லாது மனிதன் மனிதன் காலில் விழுவதையே ஒருவனின் சுயமறியாதைக்கு எதிரானது என்று சொன்ன பெரியாரின் பாசரையிலிருந்து வந்த பழம்பெரும் புலியான நெடுஞ்செழியன் நெடுஞ்சான்கிடையாக ஜெயெலலிதாவின் காலில் விழுந்து வணங்கிய அழகை என்ன வென்று வர்ணிப்பது. பாரதிதாசன் என்ன சளைத்தவரா? செல்லம்மாளின்(பாரதியின் மனைவி) காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கியவர் இல்லையா? அதற்கு அவர் கொடுத்த விளக்கம் அதனிலும் பெரிது பெரிது. அதாவது பாரதியாரின் திருமேனியை பார்த்தவளாம் சேல்லம்மாள். குடித்துவிட்டு பெரியாஸ்பத்திரி வீதியில் விழுந்துகிடந்த இவரிடமிருந்து வேறு என்ன மாதிரியான சுயமரியாதை செயல்களை எதிர்பார்க்க முடியும்?
அதாவது பாரதிதாசனும் சரி நெடுஞ்செழியனும் சரி யாரோ ஒருவர் சிந்தித்ததை இவர்கள் காப்பி அடித்தார்கள். அவ்வளவுதான். அவர்களிடம் சொந்த சரக்கில்லை. அதனால் விரைவில் வெளுத்துவிட்டார்கள்.
ஆனால் பாரதியாரும் அப்படி இல்லை பெரியாரும் அப்படி இல்லை. அவர்கள் சொன்னது செய்தது எழுதியது அவ்வளவும் அவர்கள் சொந்த சிந்தனை. அதனால் தான் அவர்களால் இன்றும் நிலைத்திருக்க முடிகிறது. இதற்கு முன்னதாக வந்துள்ள சில கட்டுரைகளில் பாரதியாரை பெரியாருடன் ஒப்பிட்டு எழுதியிருப்பபதை அனேகம் பேர் படித்திருப்பீர்கள். பாரதியாரை பார்பனிய காவலாலியாகக்கூட சித்தரக்கப் பட்டிருப்பதை கண்டு சற்று கவலையும் உற்றிருக்கலாம். அங்கே பாரதியாரையும் பெரியாரையும் ஒப்பிட்டவர் ஒரு சின்ன விஷ்யத்தை விட்டுவிட்டார். அதாவது அவர்கள் இருவரும் வாழ்ந்த கால அளவை மறந்துவிட்டார். அவர்கள் தோன்றிய சமூகங்களையும் மறந்துவிட்டார். பெரியார் தன்னை பற்றி கூரும் பொழுது தான் நாற்பது வயது வரை காலியாக இருந்தேன், மைனராக இருந்தேன், கோவில் தர்மகத்தாவாக இருந்தேன் என்றெல்லாம் சொல்கிறார். கோவில் தர்மகத்தாவாக இருந்தபோது தான் தேவதாசி முறையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததாக கூறியுள்ளது அனேகம் பேர் அறிந்ததே. அனால் பாரதி வாழ்ந்ததே நாற்பது ஆண்டுகள். அதற்குள் அந்த காலக்கட்டதிற்கு முடிந்ததை செய்துள்ளார். பெரியார் போல் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், பாரதியார் அளவுக்கு பெரியாரே செய்திருக்க முடியுமோ என்பது சந்தேகமே. மேலும் பெரியார் தோன்றியதோ சூத்திரர்ராக. அதாவது பாரதியாரைப் போல பிராமணராக அல்ல. பிராமனர்கள் தமிழ்பேசும் பிராமணர் அல்லாதோர் அனைவரையும் சூத்திரராக பார்பது என்பது மரபு. அஹ்ரஹாரத்தில் பிறந்த பாரதியார் சிறு வயதில் எழுதிய ஒன்றை கற்பக வினாயகம் இப்படி சொல்கிறார் : தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?
தந்தை இறக்கும் போது பாரதியாருக்கு வயது ஏழு அல்லது எட்டு வயது மட்டுமே. அப்படி ஒரு சிறுவனாக இருக்கும் போதே தன் குலத்தைப் பற்றியும் தன் குலப்பெருமையை காக்கும் மனுதர்மத்தைப் பற்றியும் அறிந்து கொண்டது மட்டுமில்லாமல், அதற்கு பங்கம் வரும் வேளை வெகுண்டு எழந்து சாடி, பாட்டுப் படிக்க முடிந்தது அவரின் பெருமையேன்றி வேரேதும் இல்லை. அதுவே வாலிபனான பிறகு பாரதி சாதிக் கொடுமையைக் கான சகிக்காமல் பஞ்சமனிடம் இருந்து தன்னை விலக்குவது, தானணிந்துள்ள பூநூல் என்று உணர்ந்த மாத்திரம் அதனை அறுத்தெறிந்த மாபெரும் புரட்சியாளன். பஞ்சமனை தன் அளவுக்கு சமமாக்க அன்றைக்கு அவனுக்கு தோன்றிய உபாயம் அவனுக்கும் பூநூல் அணிவிப்பதே அன்றி வேறில்லை.
னால் இன்றக்கும் பாரதிக்கு வந்ததைப் போல் பிரான்சில் வாழும் தமிழனுக்கு அப்படி ஒரு தன்மான உணர்ச்சி வரவில்லையே என்பதை நினைக்கும் போது தான் மிகவும் வருத்தாமாக இருக்கிறது. பிரான்சில் சுமார் முப்பது தமிழ் சங்கங்கள் இருந்தும் தமிழ்நாட்டில் தமிழுக்கு இழுக்கு வரும் சமையம் ஒரு சிறு கண்டன அறிவிப்பு கூட வெளியிட முடியாத அளவிற்கு முதுகெலும்பு அற்ற மண்புழுவைவிட கேவலமான நிலையை என்னவென்று சொல்லுவது. உதாரணத்திற்கு தில்லையம்பலத்தில் தமிழில் வழிபட சென்ற தமிழ் ஓதுவார் அவர்களை அனுமத்திக்காதது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தின் உதவியுடன் கைதும் செய்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஆப்பு வைத்த தில்லை மூவாயிரங்களை எதிர்த்து ஒரு சிறு கண்டனம் கூட தெறிவிக்க முடியாமல் அஞ்சி நடுங்கும் துப்புக் கெட்ட சங்கங்கள் எப்படி பாரதிப் போன்ற புரட்சியாளனுக்கு விழா எடுக்க முடியும்?
தில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் சிதம்பரத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு ஏன் நீங்கள் கண்டனம் தெறிவிக்கவில்லை என்று நான் கேட்டதற்கு, முப்பத்தைய்ந்து(FAFI) சங்ககளின் தலைவன் நான் என்று மார்தட்டும் அந்த பெருந்தகை சொன்ன பதில் என்ன தெரியுமா? "அட அப்படியா?, எப்ப நடந்தது இது?, இதை ஏன் நீங்கள் வந்து எங்களிடம் சொல்லவில்லை?, சோல்லியிருந்தால் கண்டனம் தெறிவித்திருக்கலாமே...''. னென்னே னென்னே.... அதாவது அவருக்கும் அவர் சார்ந்துள்ள சங்கங்களுக்கும் தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை. அப்படியிருக்க வரலாற்று வீரன் பாரதியை பற்றி இவர்களுக்கு என்ன என்ன தெரியும் என்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டுவிடிகிறேன். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் இவர்களுக்கு நெடுஞ்செழியன் கோடுத்த கொட்டும் வீணாகிவிட்டதென்றே எண்ணுகிறேன். அதாவது பாரதிதாசனை பற்றி தெரியாமல் அவருக்கு விழா எடுக்காதீர்கள் என்ற வகையில் நெடுஞ்செழியன் தமிழில் சொன்னது இவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லையோ என தோன்றுகிறது.
இப்படி இன்றும் அறியாமையில் புதைந்து கிடக்கும் இவர்கள் போன்றவர்களை பார்த்து ஆத்திரப்படுவதா அனுதாப்படுவதா என்று விளங்காமல் தான் மனம் வெதும்பி அன்றே பாரதி இப்படிப் பாடினான் போலும்:
"நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் "
தொடரும்...

Sunday, 20 May 2007

வண்டமிழை எதிர்ப்பாரை எதிர்ப்பேன்

தாளெடுத்துப் பாட்டெழுதிக் கொண்டி ருந்தால்
தமிழெடுத்து விழாவெடுத்துக் கொண்டி ருந்தால்
தோளான தமிழ்ப்பகையைத் தொலைப்ப தெந்நாள்.
தேந்தமிழசை ஆட்சியிலே அமர்ந்தலெந்த ந்நாள்
நாளாக நாளாக நானு மிங்கே
நற்றமிழில் பாட்டெழுத வெறுப்பும் கொண்டேன்
வாளெடுத்துப் போர்புரிய விருப்பம் கொண்டேன்
வண்டமிழை எதிர்ப்பாரை எதிர்ப்பேன் என்றும்
- இலக்கியன்

Monday, 14 May 2007

தில்லுமுள்ளுகளும்? தள்ளுமுள்ளுகளும்? -3

தொடர்வதற்கு முன் ஒரு சின்ன செய்தி. நான் கடைசியாக "பிரான்ஸ் தமிழ் சங்கம்" என்று முடித்ததாலோ என்னவோ இந்த இரெண்டு நாளில் தொலைபேசி அழைப்புகள் பலவும் மின்னஞ்சல்கள் பலவும் வந்துள்ளன. நான் என்னவோ பிரான்ஸ் தமிழ் சங்கத்தை பற்றி விமர்சிக்க போவதாக எண்ணி பல பேர் பல கதைகளை சொன்னார்கள். ஒரு தனிப்பட்ட சங்கத்தில் இருபது இருபத்தைந்து வருடங்கள் முன்னால் நடந்த சம்பவங்களை இப்போது கிளற நான் வரவில்லை. அந்த சங்கத்தின் முன்னால் உறுப்பினராக இருந்தாலும் கூட பரவாயில்லை. எதுவுமே சம்பந்தம் இல்லாமல் தலை இடுவது, வீண் விரோதத்தையே தமிழர்களுக்குள் தோற்றுவிக்குமே அன்றி வேறொரு பலனும் தாராது. ஆனால் அதே நேரத்தில் அனைத்து சங்கங்களும் சேர்ந்து நடத்திய ஒரு பொது நிகழ்ச்சியில் நடைபெற்ற கூத்துகளை பேசுவதில் தவறேதும் இல்லை என்றே எண்ணுகிறேன். நிற்க.


முதலில் இப்பொழுது எடுத்திருக்கும் பாரதியின் 125வது ஆண்டு விழாவை பற்றி பார்ப்போம். இந்த விழாவினை முதலில் நடத்த முடிவு செய்தவர் பிரான்ஸ் தமிழ்வாணி பத்திரிக்கையின் ஆசிரியரும் பிரான்ஸ் முத்தமிழ் சங்கத்தின் தலைவருமான திரு.ஜெயராமன் அவர்கள் என நம்பத்தகுந்த வட்டார செய்திகள் கூறுகின்றன. இவ்விழா பற்றிய யோசனையை திரு ஜெயராமன் அவர்கள் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான (திரு.ஜெயக்குமாருடன் பகிர்ந்து கொண்டதாக) என்று நம்பப்பட்டது தவறு. திரு.ஜெயரரமன் அவர்கள் கம்பன் புகழ் பாடும் கவிஞர் திரு. பாரதிதாசனுடன் தான் கலந்தாலோசித்துள்ளார். பின்னர் திரு.ஜெயக்குமார் அவர்கள் திரு.ஜெயராமன் அவர்களை அனுகியதாகவும், பாரீஸ் தமிழ்ச் சங்கம், கம்பன் கழகம், பிரான்ஸ் முத்தமிச் சங்கம் என்ற மூன்று சங்கங்கள் இணைந்து பாரதி125 விழாவினை நடத்துவோமா என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவ்வோசனையை திரு.ஜெயராமன் நிராகரித்து விட்டதாக தெரிகிறது. அதன் பின்னரே பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் தாங்கள் அனைத்து தமிழ் சங்கங்களையும் சேர்த்து விழா எடுக்கும் வகையில் பொங்கல் விழா மலரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்கள். ஆனாலும் கருத்து வேறுபாடுகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.

பின்னர் பிரான்ஸ் தமிழ் சங்கம் நேரிடையாக அனைத்து தமிழ் சங்கங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியதாக சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு அனைத்து தமிழ் சங்கம் என்று சொல்லும் போதுதான் சில பிரச்சனைகள் எழும்ப ஆரம்பித்தன. அவர்கள் அனுப்பியதாக சொல்லப்படும் சில நபர்களுக்கு கடிதம் கடைசிவரை சென்றடையவில்லை. அது ஒரு தற்செயலான செயலாகவும் இருக்கலாம். திட்டமிட்டதாகவும் இருக்கலாம். திட்டமிட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வருவதற்கு காரணம் - கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் பட்டியலை பார்க்கும் போது லேசாக விளங்கும். அதாவது முந்தைய விழாக்களான பாரதி நூற்றாண்டு விழாவிலும் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவிலும் கேள்விக் கேட்டவர்களுக்குத் தான் கடிதங்கள் போய் சேராத மாயம் நடந்திருக்கிறது. யார் யார் என்ன என்ன கேள்வி கேட்டார்கள் என்று தானே கேட்கிறீர்கள் ? பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் பிட் நோட்டீஸ் கொடுத்த கொடுங்குற்றத்தை செய்தவர் பேராசிரியர். திரு சக்திப்புயல் அவர்கள். பாரதி நூற்றாண்டு விழாவிற்கு பிறகு நடந்த சில முறை கேடுகளை எதிர்த்து வினா எழுப்பிய தமிழர் இல்லத்தின் தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்.

அது இன்னாங்க பிட் நோட்டீசுன்னு கேட்குறிங்களா? அதையும் கொடுத்து புடரேன். இது தான் பெராசிரியர் சக்திபுயல் பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் கொடுத்த பிட் நோட்டீஸ் :

என்ன மச்சான் எங்கெ கௌம்பிட்டீங்க?

பாரிஸில பாவேந்தர் நூற்றாண்டு விழா நடக்குதாம். அதெப்பாக்கப் போறேன்.

வெழா குழு தலைவர் யாரு? பெரிய தமிழறிஞரோ?

இல்லே.

தமிழ்க்கவிஞரோ?

அதுவுமில்லே.
பின்னே வேற என்னதான் செய்யறாரு?

வேலையில்லாம விட்டிலே இருக்காராம்.

அப்போ, வேலை வெட்டி இல்லாதவனெல்லாம் வெழா எடுக்கலாம்னு ஆயிடிச்சா?

அப்படியில்லெ புள்ளெ, அவரும் இந்தியாவிலே இருக்கும்போது யுனெஸ்கோவிலெ வேலை செஞ்சிருக்கராமில்லே?

அப்படி என்ன வேலை? யுனெஸ்கோ தலைவரா? செயலாளரா?

அதெல்லாம் ஒன்னுமில்லெ, ஏதோ எடுபிடி வேலையாம்;, இப்போ வயசாயிட்டு சும்மாயிருக்காராம்.

வயசானா வீட்டிலே செவனேன்னு சும்மாகெடக்கவேண்டியது தானே.

அவரும் செவனேன்னுதான் இருக்காராம். செவன் கோயில்ல அப்பப்ப மணியாட்டறாராம்.

அது சரி செவன் கோயில்ல மணியாட்டறவருக்கு பாரதிதான் வெழாவிலெ என்ன வேலை?

சீரங்கத்து ரங்கநாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோன்னு பாவேந்தர் எழுதினதா எங்கப்புச்சி சொல்லும். அப்படியிருக்க, இரும்படிக்கிற பட்டறையிலெ இந்த ஈக்கு என்ன வேலை?

எல்லாம் பணம் தான்?

பணமா? என்ன பணம்?

பாவேந்தர் நூற்றாண்டு வெழாவுக்காக இந்திய அரசு பணம் குடுக்குதாம். அதை வாங்கரதுக்காகத்தான் இந்தக் கூத்துன்னு சொல்லிக்கிறாங்க.

காசுக்காக கொள்கையை மாத்திக்கிறவங்க வேசைக்கு சமானம்னு பாவேந்தர் சொன்னதா கேள்விப்பட்டிருக்கேனே?

அதெல்லாம் கொள்கைன்னு ஒன்னு இருக்கிறவங்களுக்குத்தான். கெடைக்கிறதை சுருட்டறதுன்னு கொள்கை வச்சிருந்தா எந்த வெழாவா இருந்தா என்ன. நாற்காலியும் நாலு காசும் கெடைச்சா போதாதா?

அது சரி, தமிழ் நாட்டிலே இருந்து யாரு வந்திருக்காங்கலாம்?

யாரோ நாவலராம்.

என்னது நாவழவழாவா?

இல்லே, அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன்.

ஐய்....யெ, அந்த மனுசனா?

ஏன்? அந்த மனுசனுக்கென்ன கொறை?

இல்லே, பாம்பையும் பாப்பானைனும் கண்டா பாம்மை உட்டுடு, பாபாபனை அடிங்கிற பெரியார் கொள்கையுடையவரு பாவேந்தர். இந்த மனுசன் அந்தப் பாப்பாத்தி காலிலே உழுந்து கெடக்கிறவர். இவரு ஏன் இந்த வெழாவுக்கு வந்தார்.

இவர் வெழாவுக்கு எங்கே வந்தார்? அவர் புள்ளை அமெரிக்கவுல இருக்குதாம். அதைப் பாக்கப் போற வழியிலே இப்படி வந்திருக்காராம். போற போக்கிலே புள்ளையாருக்கு ஒரு கும்புடு போட்டுட்டுப் போறதில்லியா, அது மாதிரி தான்.

பாரதி தாசனையே புள்ளையாராக்கிட்டியே மச்சான்?

சும்மா ஒரு உதாரணத்துக்கு சொன்னேன் புள்ளெ.

நீ உதாரணத்துக்குத் தான் சொன்னெ. ஆனா அந்த சிவனுக்கு மணியாட்டறவர் பாவேந்தருக்கும் பூணுhல் போட்டு, பூரணகும்பம் வச்சி, ஓமம் வளத்தி பூஜை செய்யப்போறாரு பாரு.

அது சரி, அமைச்சர் இங்கெ வந்த விசயம் அவரோட எசமானியம்மாவுக்குத் தெரியுமா?

தெரியாதுன்னு தான் நெனைக்கிறேன்.

அது தானே கேட்டேன். அந்தம்மாவுக்குத் தெரிஞ்சா ஒடனே இவரு சீட்டு கிழிஞ்சிறாதாக்கும்.

அப்படியெல்லாம் நடந்துடுமா? இவர் யாரு? கழுவுற மீன்ல நழுவுற மீனாச்சே. நெடுஞ்சான் கெடையா கால்ல உழுந்து சரிபண்ணிப்புடுவாராக்கும்.

சரி, வேற யாரு வெழா நடத்துறாங்க?

யாரோ பாரிஸ் ஜாமாலாம்.

அதென்னாங்க பா….ரிஸ் ஜமால். பாரிசை வெலைக்கு வாங்கினவரா? இல்லே பாரிசிலேயே பொறந்து வளந்தவரா?

அதெல்லாம் ஒன்னுமில்லே, எல்லாம் நம்ம தமிழ்நாட்டிலே பொற்ந்தவர் தான். ஏதோ ஒரு பெருமைக்கு அப்படி பேரு வச்சிருப்பாரு.

பேர்லிலேய பெருமைக்கு பாரீஸை புடிச்சிக்கிட்டவரு நடத்தற வெழாவிலே எந்தத் தமிழுணர்வை எதிர்பார்க்க முடியும்?

அப்டியில்லே… லால்குடி ஜெயராமன், குன்னக்குடி வைத்தியநாதன், மதுரை சோமு இப்படியெல்லாம் ஊர் பேரைத் தன் பேரோட சேத்து வச்சிக்கிறதில்லையா? அப்படித்தான்.

அது சரி, சங்கீத வித்துவான்கள் தங்களுடைய சங்கீத பரம்பரையை அடையாளம் காட்டவும், தங்கள் வித்தையால் தம் ஊர் பெருமை அடையவும் அப்படிப் பேர் வச்சுக்கிறாங்க. இல்லை இல்லை, மத்தவங்க அந்தப் பேரை அவங்களுக்கு சூட்டறாங்க. இவருக்கு பாரிஸ்ங்கிற பேரை யார் சூட்டினாங்க? ஒரு வேளை பிரெஞ்சிலே மேதையோ?

அப்படியெல்லாம் தப்பாக எடைபோட்டுடாதே. தனக்கு choux என்கிற காய்கறியைக்கூட ஷூன்னு சொல்ல வராது சூன்னு தான் சொல்லமுடியும். அதனாலே கேட்கிற பிரெஞ்சுக்காரங்க காசு என்கிற அர்தத்திலே sous ன்னு புரிஞ்சிக்கிறாங்கன்னு அவரே சொன்னதா கேள்விப்பட்டேன்.

பின்னே எதுக்கு பாரிஸ் பேரை வச்சிக்கிட்டாராம்.

பெருமைக்குத்தான் ஊர் பேரை வச்சிக்கணும்ன்னு சட்டமா என்ன? திருவாரூர் தேவடியாள், சீரங்கத்து ஒலக்கைன்னு சொல்லறதில்லையா?

அது சரி, அவருக்கு தமிழாவது ஒழுங்கா வருமா?

விழான்னு சொல்ல வராதாம். வ்ளான்னு தான் சொல்லுவாராம்.

அப்படியா? வாள்க தமிள்.

அது சரி வ்ளாவிலெ வேறெ யாருக்கு முக்கியப் பொறுப்பாம்?

தமிழ்ச்சங்கத் தலைவர் தசரதனாம்.

அடேயப்பா, தமிழ்ச்சங்கத்துக்கே தலைவரா? மதுரையில பாண்டிய மன்னருங்கல்லம் வச்சி நடத்தி நக்கீரருக்கும் சிவபெருமானுக்கும் போட்டி வந்தததுன்னாங்களே, அந்த மாதிரியா? அது சரி, இந்த சங்கத்திலே மொத்தம் கவியரங்கேறிய புலவர்கள் எத்ததைபேராம்?

இருக்கிறதே தலைவரையும் செயலாலரையும் சேத்து மொத்தம் மூனு பேராம்.

அது சரி இவருக்காவது தமிழ் வருமா?

தமிழ் வரும். ஆனா வீட்டுக்குள்ளே போக முடியாதாம். உள்ளே பிரெஞ்சு வெளியே தமிழாம்.

சரி, இவங்களையெல்லாம் விடு. வெழாவிலே கவியரங்கம் நடக்குதா?

அப்படி ஒன்னும் தெரியலை?

பாவேந்தர் பற்றி ஒரு பட்டி மன்றம்?

பட்டிமன்றம்னா என்னான்னு கேட்டாராம் வெழாக்குழவின் தலைவர்.

வழக்காடு மன்றம்?

யார் மேடையிலே மொதலெடம் புடிக்கிறதுங்கிற வழக்காட்டம் தான் வெழா அமைப்புக் கூட்டத்திலெ காரசாரமா தொடர்ந்து நடந்ததாம். மத்தபடி வெழா மேடையிலெ அப்படி ஒன்னும் இல்லையாம்.

பாவேந்தரைப் பத்தி புத்தகம் ஒன்னும் வெளியிடலியா?

ஒருத்தர் பாவேந்தரைப் பத்தி ஒரு புத்தகம் வெளிட அனுமதி கேட்டாராம். மோதல்ல ஒத்துக்கிட்டு பிறகு நேரமில்லைன்னு மறுத்துட்டாங்களாம்.

அப்படின்னா பாரிஸிலே தமிழ் படிச்சவங்க யாருமே இல்லையா?
பேராசிரியர்கள், நல்ல தமிழறிஞர்களெல்லாம் இருக்கிறாங்களாம். அவர்களுக்கெல்லாம் எடம் கெடையாதுன்னு ஒதுக்கிட்டாங்களாம்.

நல்..ல தமிழறிஞருன்னு சொல்லிட்டியே, அவங்களை சேத்துக்குவாங்களா?

நான் ஒன்னு சொல்லட்டுமா மச்சான்?

சோல்லு புள்ளே.

பாவேந்தர் திரும்ப வந்து கேள்வி கேக்கமாட்டரர்ங்கிற தைரியத்திலெ இப்படிப் கூத்தடிக்கிறாங்க. அவர் பாணியிலே சொன்னா இது தற்குறிகள் தற்குறிகளுக்காக நடத்துற வெழா. இதிலே தமிழ்படிச்ச நமக்கென்ன வேலை?

அப்படி நீ என்ன புள்ளெ பெரிசா தமிழ் படிச்சிபோட்டே?

தமிழ்ப் பள்ளிக்கூடத்திலெ எட்டாவது வரைக்கும் படிச்சிருக்கேனில்லே.

இதாங்க அந்த பிட் நோட்டீசு. இது தான் பெராசிரியர் சக்திபுயல் கொடுத்த பிட் நோட்டீஸ்.

இப்ப நீங்களே சொல்லுங்க இப்ப நடக்கபோற விழாவிற்கு பேராசிரியர் சக்திபுயலை கடிதம் அனுப்பி அழைப்பாங்கன்னு நினைக்கிறீங்க? நானாக இருந்தால் கண்டிப்பாக அழைக்க மாட்டேன். ஆனா பாருங்க அவருக்கு கடிதத்தை இரெண்டு பேர் அனுப்பியிருக்காங்க. அதாவது ஒன்னு இல்லே மொத்தமாக ரெண்டு கடிதம் அனுப்பி இருக்காங்க. அனா ஒன்னு கூட போய் சேரவேயில்லை. அதாவது திரு.ஜெயகுமார் தானே அனுப்பினதாகவும், அதற்கான தபால்துறையின் முத்திரையுடனான சாட்சியும் உள்ளதாக விழாக்குழு கூட்டத்தில் கூறினார். என்னிடம் பேசுகையில் விழா குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ள மற்றோருவர் தான்தான் அனுப்பியதாக அடித்து சொல்கிறார். ஆக from the above said equation you can very well understand the liableness of the postal department is not satisfactory in france and non other than that.

அப்ப திரு.கருணாநிதிக்கும் ஏங்க தபால்துறை கடிதத்தைக் கொடுக்கவில்லை. அதுக்கும் ஒரு காரணம் இருக்கும் இல்லிங்களா? ஒரு வேளை வீட்டை பூட்டி போட்டுட்டு ஊருக்கு போயிட்டாறா? அதை அடுத்த முறை பார்போங்களா?

தமிழ்வாணி ஆசிரியர் திரு.ஜெயராமன் அவர்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பிய கடிதத்தையும் இங்கு உங்கள் பார்வைக்கு இடுகிறேன்.
கடிதம் இதோ:
வணக்கம்!
தங்களுடைய மின்தளத்தைப் பார்த்தேன். துணிச்சலுக்கு பெரிதும் பாராட்டுகிறேன். பாரதிக்கு விழா எடுப்பது வரவேற்கக்கூடியது. ஆனால் குறிப்பாக ஒரு சிலரையே அல்லது சில சங்கத்தையே ஒதுக்குவது ஆரோக்கியமற்ற செயலாகும்.முதன்முதலில் அவர்கள் அனுப்பிய மடலும் முறைகேடான செயலாகும். இருப்பின் 2007 மே மாதம் 5 ம் தேதி நடைபெற்ற 3 வது செயற்கூட்டம் கூடும் முன்னர்; திரு தசரதன் அவர்கள் வருகைபுரிந்திருந்த அனைத்து தமிழ் அன்பர்களிடம் பாரதி விழாவின் செயற்குழுவினர் மட்டும் உள்ளே வரவேண்டும் என்று சொன்னார்;. பின்னர் சிலர் நான் உட்பட தமிழ் ஆர்வத்தால் மூளைக் கெட்டு உள்ளே சென்றோம். பாரதி விழா என்றால் அவர்கள் சங்கமே முழு பொறுப்பு என்று சொல்லிவிட்டனர். அதில் சில தஞ்சாவ10ர் பொம்மைகளும் இருந்தன. என்ன செய்வது கல்லு}ரி தமிழ் பேராசிரியராகப் பணியாற்றிய திரு பெஞ்சமின் லெபோ வெறுப்புடன் வெளியேறியது வேதனைக்குரியதாகும். இதன் இடையில் பேராசிரியர் திரு சக்திவேல் வெளியிட்ட கருத்துகளும் காற்றோடு கரைந்துவிட்டது. சென்ற முறை நடந்த பாரதிதாசன் நு}ற்றாண்டு விழாவிலும் ஒதுக்கப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட துண்டு பிரசுரம் இன்னும் என் நினைவில் உள்ளது. ஏன் இப்படி? சுயநலமும், ஆசையும் உடன் சேர்ந்தால் இந்த விளைவுதானோ?
தொடரும்...

Thursday, 10 May 2007

தில்லுமுள்ளுகளும்? தள்ளுமுள்ளுகளும்?-2

தாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து விழா எடுத்து புகழ்? சேர்க்கும் குள்ளநரிக் கூட்டம் ஒரு புறம். தமிழ் மொழிக்கு எதாவது செய்ய வெண்டும் என்று ஏதாவது ஒரு வாய்ப்பினை தேடும் பொழைக்கத்தெறியாத மற்றோருகூட்டம். எதுவாக இருந்தாலும் தனக்கு தனியாக என்ன இலாபம் கிடைக்குமுன்னு அலையும் வேறொரு ஈனக்கூட்டம். இவர்கள் எல்லோருக்கும் நல்ல புள்ளையா ஜால்ரா பொட்டு துண்டு போத்திக்க துடிக்கும் ஒரு பெரும் கூட்டம். இப்படி பிரான்ஸில் வாழும் தமிழ் பேசும் இந்தியப் பொருளாதார அகதிகளை பிரித்து விடமுடியும். இதில் தமிழ் பேசுவதையே கேவலமாக எண்ணும் பெரியோர்களை நான் சேர்க்கவில்லை.
மிழர்களின் சங்கங்கள் என்று பார்த்தால் இன்னும் பல சுவாரசியமான விவரங்கள் தெறியவரும். கணவன் மற்றும் மனைவி மட்டும் சேர்ந்து உருவாக்கி உள்ள சங்கங்கள் உள்ளன. வெரும் மூன்று பேர் மட்டும் சேர்ந்து ஒரு சங்கம் உருவாக்கி வெற்றிகரமாக வேறு உருப்பினர்களைக் கூட சேர்க்காமல் நடக்கின்ற கொடுமையும் உள்ளது. மற்றபடி பல "அவார்டு" மற்றும் "ஷீல்டு" கொடுக்கும் சங்கங்கள் உள்ளன. அப்படியான சங்கங்களில் தலைவரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் டம்மிகள். டம்மிகள் வாயைத் திறந்தால் உடனே சங்கத்திலிருந்து நீக்கப்படுவர். பல பஜனைப் பாடும் சங்கங்கள் ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் வித்தியாசம் தெறியாத தலைவர்களால் நடத்தப் படுவதும் உண்டு. சாமியார்களை வைத்து காசு பண்ண பார்க்கும் சங்கங்கள், இலைமறைவு காய்மறைவாக நடத்தப்படும் சாதி சங்கங்களும் உண்டு (முதலியார் மற்றும் வன்னியர்). கோவில் பெயர் சொல்லி அர்ச்சனை தட்டு விற்று தமிழ் வளர்க்கும் சங்கங்களும் உண்டு. இருபத்தைந்து வருடங்கள் தமிழ் பள்ளிகூடம் நடத்தி காணாமல் போனவர்களும் உண்டு. பிரான்ஸில் வாழும் புதுவை தலித்துக்களுகென்று ஒரு கூட்டமைப்பு இல்லாதது போலவே தோன்றுகிறது. சரி இவ்வளவு பேரும் சேர்ந்து பாரதிக்கு ஒரு விழா எடுக்க முற்பட்டால் விளைவு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கும் போது அதனை செய்து முடிக்க தைரியாமாக முற்பட்டது பிரான்ஸ் தமிழ் சங்கம்.
தொடரும்

Wednesday, 9 May 2007

தில்லுமுள்ளுகளும் தள்ளுமுள்ளுகளும்-1

ல்லோருக்கும் வணக்கமுங்க, பாரதி பாரதி பாரதி... அப்படின்னு என்ன திடீர்ன்னு பாரதி புராணம் பாட வந்துட்டானுங்க இவனுங்கன்னு நீங்களெல்லாம் கேட்கிறது எங்கள் காதுகளுக்கு கேட்காமல் இல்லிங்க. அதை பற்றித்தான் இப்போ இங்க பேச வந்திருக்குறோமுங்க. இந்த வருஷம் நம்ம பாரதியின் 125வது பிறந்த ஆண்டானபடியால், அவருக்கு அவங்கவுங்களுக்கு தகுந்த மாதிரி பல மாதிரி விழாக்கள் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதுல பாருங்க நாங்களும் பிரான்சில பாரதிக்கு ஒரு விழா எடுத்துப் புடனமுன்னு பிரான்ஸ் தமிழ் சங்கம் முதல்ல ஒரு விளம்பரம் செய்தாங்க. பிரான்ஸ் தமிழ் சங்கம் அப்படின்னா என்னமோ எதோன்னு பயிந்து புடாதிங்க. அதைப் பற்றி பின்னர் ஒருக்கா தெளிவா பேசுவோம்- என்னா நான் சொல்றது சர்தானே?
விளம்பரம் வந்தவுடன் உழுந்தடிச்சி எல்லோரும் ஓடி பாரதிக்கு விழா எடுக்க தங்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டோம் - நூறு ஈரோ மொய் வைத்துன்னு இங்க தேவையில்லாம எதுக்கு சொல்வானேன் - என்ன நான் சொல்றது சர்தானே? இணையத் தொழில்நுட்பத்தில் புலி ன்னு சொல்லிக்கிட்டு திரிகிற எனக்கு பாரதி125பிரான்ஸ் விழாவைப் பற்றி இணையத்தில் ஆத்துவதற்கான பாக்கியம் கிட்டியது என்றால் அது மிகையாகாது. எனக்கு இந்த ஜென்மமே சாபல்லியம் அடைந்துவிடும் இந்த மாபெரும் பாக்கியத்தை விழாக் குழுத் தலைமையிடமிருந்து போராடிப் பெற்றுத் தந்தது திருவள்ளுவர் புகழ் பாடும் திருக்குறள் அய்யா திருஅண்ணாமலை பாஸ்கர் எனும் பெருந்தகையால் என்பதை கண்டிப்பாக இங்கு பதிவு செய்வது கடமையாகும். நிற்க.
விழாக்குழு கூட்டத்துல முந்திரிக்கொட்டை மாதிரி பெரிய லார்டு லபர்தாசு போல எந்திருச்சி தலீவர பாத்து அய்யா நான் ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுரங்கோன்னு சொல்லிப்புட்டு பேச ஆரம்பிச்சேங்க. என்ன பேசனேன்னு உங்களுக்கு கேட்கிற ஆசை இல்லாட்டியும் சொல்ர மூட்ல நான் இருக்கிறதனால நான் சொல்லத்தான் போறேனுங்க. "ஐயா தலீவர் அவர்களே இது வரைக்கும் பிரான்ஸ்ல நடக்கிற தமிழ் சங்கங்கள் விழாவெல்லாத்திலேயும் வாடிக்கியா துண்டு போத்துறதும் துதிபாடரதும்மா தான் இருக்குதுங்க, விழா முடிந்த பிறகு இந்தியாவில் இருந்து வருகை தரும் சீ சிறப்பு விருந்தினர்களுக்கு டூரிஸ்ட் கைடாக சங்கத்தலவர்கள் அலைவதும் அதற்கும் மேல் ஒரு படி சென்று என்ன நடக்கும் என்பதை நீங்கள் கேட்க ஆசையாக இருந்தாலும் நான் சொல்ற முடியாத அளவிற்கு உள்ளபடியிருப்பதால், இந்த பாரதியின்125பிரான்ஸ் விழாவை சற்று வித்யாசமாக ஒரு மாபெரும் இலக்கிய விழாவாக அமைய வழி செய்யும் வகையில் தமிழகத்திலிருந்து தமிழ்க்கு அணிசெய்யும் தமிழார்வலர்களை அழைக்கவேண்டும் என்று சொன்னேன். இதை ஆமோதிக்கும் விதமாக திருக்குறள் பாஸ்கர் அவர்கள் தலீவ்ரைப் பார்த்து திரு.தமிழருவி மணியனை நாம் இம் முறை அழைக்க வேண்டும் என்று சொன்னதுதானே தாமதம் - உடனே தலீவர் குறுக்கிட்டு தமிழருவிய? கூட்டா யாருய்யா டிக்கெட் செலவு செவ்வது? அரசியல்வாதியை கூட்டா கவுர்மென்ட் செலவுலேயே வருவாங்க போவங்க. அவுங்களுக்கு பாரீசில் பாதுகாப்பு தங்கறதுக்கு எல்லாத்தையும் இந்தியன் ஏம்பசியே பாத்துக்கும், அப்படின்னு ஒரு போடு போட்டாரே... அப்ப பாக்கனுமே எல்லார் மூஞ்சியையும். எல்லாருடைய மூஞ்சியும் கோனிக்கிச்சின்னு தானே நினைச்சீங்க - அதான் இல்லே. ஒரு ரியாக்ஷ்னும் இல்லே. அல்லாரும் கோரசா ஜால்ரா அடிச்சாங்கன்னா அது தப்பாப் போயிடும் அதனால அப்படி சொல்லாம ஒத்துகிட்டாங்கன்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கு பாருங்க. எனக்கு அந்த நிமிடத்திலிருந்து விழாவிற்கும் தமிழுக்கும் பாரதிக்கும் சம்மந்தமில்லை என்ற எண்ணம் வலுக்கத் துவங்கியது.
ரி மீண்டும் வேதாளமாகிய நான் மரத்திலிருந்து இறங்கி விக்ரமாதித்த தலீவரின் கவனத்தை திருப்பும் முகமாக வேறொரு வேண்டுகோளை வைத்தேன். அதாவது பாரதியின் மேல் பல காலமாக உள்ள சில குற்றசாட்டுகள் மற்றும் கறைகளை அலசி ஆராய்ந்து ஒரு ஆய்வறிக்கை ஒன்றை பிரான்ஸில் உள்ள தமிழ் கவிஞர்களை கொண்டு செய்து விழா மலரிலோ அல்லது விழாமேடையிலேயே ஒரு விளக்க அறிக்கையாக வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். தலீவர் உட்பட அனைவரும் கைத்தட்டி இந்த யோசனையை வரவேற்றார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால் நீங்கள் உண்மையிலேயே அறிவாளிதான் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ய்யய்யோ அதெல்லாம் வீண் பிரச்சனை. அதெல்லாம் வேண்டாம் என்று தலீவர் மறுத்த பின்னர் கண்டிப்பாக இது பாரதிக்கான தமிழ் விழா அல்ல என்ற சந்தேகம் மேலும் வலுத்தது. அதற்கு பின்னர் தலீவர் அவர்கள் தான் புதுவை மாநிலத்தின் முன்னாள் முதல்வர் MOH என்று அன்போடு அழைக்கபெற்ற புதுவையின் தந்தையும் இப்பொது சவுதி அரேபியாவில் தமிழுக்காக போறாடும் இந்தியத்தூதுவர் திரு. M.O.H. பாருக்கையும், அவரைப்போலவே புதுவையில் தமிழ் பாதுகாவலராக இருக்கும் திரு.பாருக்கின் மகனாகிய மான்புமிகு அமைச்சர் திரு ஷாஜஹானையும் அழைத்துள்ளதாக சொன்ன மாத்திரத்தில் விழாக்குழுவினர் முகத்தில் பட்டொலிவீசியதின் ஆச்சரியம் தான் என்னவோ?
விழாக்குழுக் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக வந்திருந்தும் அவரை உள்ளே வரக்கூடாது என்று மறியாதை செய்தும் கடைசி வரை அவரிடன் ஒரு சிறு யோசனையோ அல்லது ஒரு சிறு கொவுரவ பதவிகூட குடுக்காமல் அவருக்கு புகழ் சேர்த்தும் பேராசிரியர் திரு. லெபோ பெஞ்சமினே வெறுத்துப்போய் ஓடச்செய்த பெருமை யாரைச் செறும் என்பதனை நீங்கள் SMS செய்தால் உங்களுக்கு பாரதியின் முண்டாசு பரிசாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலும் அங்கு அமர்ந்திருக்கும் அருகதை எமக்கு இல்லை என்பதால், பாரதியின் 125வது வருடத்தை நான் எனது பாணியில் தனியே இணையத்தில் ஒரு மணிமண்டபமாக கட்ட முடிவுசெய்துள்ளேன்.
இந்த விழாக் குழுவினரிடையே நடந்த பதவிச் சண்டையைப் பற்றியும், 25 வருடத்திற்கு முன் பாரீசில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் நடைப்பெற்ற அவலங்களையும் ஒரு தனியான பதிவில் இடவுள்ளேன். இப்படியான வெளிநாடுகளில் நடக்கும் விழாக்ககளில் என்ன நடக்கிறது, யார் இலாபம் அடைகிறார்கள், எவ்வளவு, எப்படி என்பதனை இப்ப நீங்க கேட்கிற மூட்ல இருந்தாலும் எனக்கு சொல்ல நேரம் இல்லாததுனால ஒரு தனி பதிவா பின்னர் போடுகிறேன்.
பாரதியை பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெறியும் என்று இணையத்தில் தேடியதில் பாரதியின் பல புதிய பரிமானங்கள் தெளியத் துவங்கியது. நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இங்கு கொண்டுவந்து இட்டுள்ளேன். அவரவர்கள் பாரதியின் மேல் உள்ள பக்தியின் அளவிற்கேற்றார் போல் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம். பக்தியை நீக்கி புத்தியை தீட்டுவோர் பாரதியை அறிந்துகொள்ளலாம். நன்றி

Tuesday, 8 May 2007

பாரதி 125 - ஞாநி

‘கனக்குஞ் செல்வம் நூறு வயது இரண்டையும் எனக்குத் தா’ என்று தான் தொழுத கடவுளிடம் ஓயாமல் கேட்டவன் பாரதி. இரண்டும் அவனுக்குக் கிட்டவில்லை. கிட்டியது வெறும் 39 வயதும், கடைசி வரை தீராத வறுமையும்தான்!ஆனால், பாரதிக்கு வேறொரு செல்வம் கிட்டியது. கனக்குஞ் செல்வத்தை விடப் பெருஞ்செல்வம்... காலத்தால் அழியாத, காலந்தோறும் வளர்கின்ற புகழ்ச் செல்வம்! பாரதியின் படைப்புகள், பல நூறு வருடங்கள் உயிரோடு வாழ்ந்து, அவன் புகழ்ச் செல்வத்தை பெருக்கிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை!படைப்பின் எந்தப் பிரிவானாலும் செய்யுள், வசன கவிதை, பாட்டு, குட்டிக் கதை, நீண்ட கதை, உருவகக் கதை, கருத்துக் கட்டுரை, பத்திரிகைச் செய்திக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, நாடகம் எனப் பல வகைகளையும் செய்துபார்த்து, முன்னேர் உழுதவன் பாரதி. எனவே, இன்றும் என்றும் படைப்பாளியாக விரும்பும் எவரும் பாரதியைப் பயிலாமல் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ள முடியாது.எப்படி எழுத வேண்டும் என்பதற்கு பாரதி சொன்ன இலக்கணத்தைப் பின்பற்றினால், எளிதில் கருத்தை வெல்லும் எழுத்தாக நம் எழுத்து மலரும். ‘நீ எழுதியதைத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவனுக்கு வாசித்துக் காட்டு. அவனுக்கு விளங்கினதென்றால், நீ சரியாக எழுதியதாக அர்த்தம்’ என்கிறான் பாரதி. எழுதும் முறையையும், எழுத்தின் நோக்கத்தையும் ஒரே சமயத்தில் இது விளக்குகிறது. யாருக்காக எழுதுகிறாய், எப்படி எழுதுகிறாய் என்று வரையறுக்கச் சொல்லும் இன்றைய நவீன தகவல் தொடர்பியலின் சாரத்தையே இந்த அறிவுரையில் காணலாம்.கடந்த 30 ஆண்டுகளில், சோர்வு வரும் தருணங்களில் எல்லாம், பாரதியின் கவிதையையோ கட்டுரையையோதான் நான் எடுத்து வைத்துக்கொள்கிறேன். சிறிது நேரம் பாரதியில் தோய்ந்ததும்,சோர்வுகள் நீங்கி மீண்டும் உற்சாகம் என்னைப் பற்றிக்கொள்ளும்.ஓவியனாக வேண்டும் என்பது என் இளம் பருவக் கனவுகளில் ஒன்று. எல்லா பிரபல ஓவியர்களின் படங்களையும் பார்த்து அதுபோல வரைந்து முயற்சித்துப் பழகியதில், சொந்தமாக வரையும் கற்பனைத் திறன் முடங்கிவிட்டது. ஆனால், இன்றும் ஓவிய னாக நான் என்னைப் பற்றிப் பெருமைப்படும் ஒரே ஓவியம், 1982 ல் பாரதி நூற்றாண்டுக்குப் பின் சொந்தமாக பத்திரிகை தொடங்க முயற்சித்தபோது, அதன் சின்னமாக நான் வரைந்த பாரதி ஓவியம் தான்.எங்கள் வீட்டுப் பிள்ளையார் பூஜைகளில், பாரதியின் ‘விநாயகர் நான்மணி மாலை’யைத்தான் நான் சிறுவனாக இருந்தபோது படித்து, மலர் தூவுவேன். அதுதான் என்னை நாத்திகத்தை நோக்கி நகர்த்தியது. காரணம், ஆன்மிகவாதியான பாரதியின் கடவுள், மத குருமார்கள் சொல்லும் கடவுளிலிருந்து வேறாக இருந்தார். கடவுளைத் தன் நண்பனாக்கி, கடவுளுக்கு உத்தரவுகள் போடுபவராக இருந்தார். பாரதியின் ஆன்மிகமும், வள்ளலாரின் ஆன்மிகமும், நாத்திகர்களின் மனித நேயமும் ஒன்றேதான் என்று உணர்த்தியது பாரதியின் ‘சரஸ்வதி வணக்கம்’.உலகத்தில் வேறு எந்தச் சமுதாயத்திலும், பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுக்கு நிகரான ஆளுமை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட பாரதியின் 125 ம் ஆண்டை நாம் எப்படிக் கொண்டாட வேண்டும்?இன்று நம் சமூகத்தில் மூன்று முக்கிய எழுச்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று, மகளிர் எழுச்சி. அடுத்தது, தலித் எழுச்சி. மூன்றாவது, மத அடிப்படைவாத எழுச்சி. முதல் இரண்டும் காலத்தின் கட்டாயம். மூன்றாவது, கடிகாரத்தைத் திருப்பிவைக்கும் முயற்சி.இந்த மூன்று எழுச்சிகள் தொடர்பாகவும் பாரதியிடமிருந்து நாம் அறிய ஏராளமாக உள்ளன. சக ஆண்களிடம் உறவு காரணமாக அன்பு காட்டவேண்டிய நிலையில் இருக்கும் பெண், அதே ஆண்களிடம் தனக்கான நீதியைப் பெறுவது எப்படி என்பதுதான் இன்றும் தொடரும் மயக்கம். பாரதி இந்த மயக்கத்துக்கு மருந்துகள் சொல்லி இருக்கிறான்.தலித் எழுச்சி என்பது, சாதி அமைப்பை ஒழிப்பதற்கான நீண்ட நெடிய போராட் டத்தின் இன்னொரு கட்டம். எல்லாச் சாதிகளும் சம அந்தஸ்தைப் பெறுவது என்பது இதில் ஒரு படி. அதை அடைந்த பின், சாதிகள் இல்லாமல் ஆக்குவது அடுத்த படி. எல்லாரும் பூணூல் அணிந்து சமமான உயரத்தை அடையட்டும் என்று ஒரு தலித் இளைஞருக்குப் பூணூல் அணி விக்கிறான் பாரதி. நோக்கம், சமத்துவம் தானேயன்றி பூணூல் அல்ல! எல்லாருக் கும் பூணூல் அணிவிப்பது என்பது நூறாண்டுகளுக்கு முந்தைய சமூகத்தின் மறுமலர்ச்சியாளர்களுக்குத் தோன்றிய தீர்வு. யாருமே அணிய வேண்டாமே என்ற மறுபக்க சிந்தனை, அடுத்த தலைமுறை மறுமலர்ச்சியாளர்களின் தீர்வு. இரண்டிலும் நோக்கம், சாதிகளின் சமத்துவம்தான்!சாதி ஒழிய சமத்துவம் மட்டுமல்ல, அக மண முறை சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் முறை அகற்றப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அதே கருத்தை பாரதி பல இடங்களில், சாதிகள் தமக்குள் வேறுபாடுகளை மறந்து கலத்தல் வேண்டும் என்று வலியுறுத்து கிறான்.பாரதி வாழ்ந்த காலத்திலேயே நாற்று நடப்பட்டு, இன்று விஷ விருட்சமாக வளர்ந்திருப்பது மத அடிப் படைவாதம். அதற்கு எதிரானவன் பாரதி என்பதற்கு அவனுடைய ஏராளமான கட்டுரைகளில் ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக, இஸ்லாம் பற்றிய பாரதியின் நேசக் கருத்துக்கள், மதம் என் பதைக் கடந்து மானுடம் என்ற வள்ளலார் பார்வையின் தொடர்ச்சியாக ஒலிக்கின்றன.மனித மனங்களை அன்பால் தான் வெல்லவேண்டும், அன்பால்தான் சமத்துவம் வரும் என்பதில் ஆழமான நம்பிக்கை பாரதிக்கு இருக்கிறது. இந்த அன்பை வளர்க்கும் அறிவை வளர்ப்பதுதான் பாரதியின் சாரம்.இதையெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே தொடங்க வேண்டும். வயது முதிர்ந்த மனங்களை மாற்ற முடியாது. இதுவும் பாரதியின் நம்பிக்கை. அதனால்தான் புதிய ஆத்திசூடி முதல் ஆரம்பக் கல்விக்கான சிலபஸ் வரை பாரதியின் மூளையும் பேனாவும் இயங்கியிருக்கின்றன.பாரதியை தமிழ்ச் சமூகம் இன்னமும் முழுமையாக உணரவில்லை. யானையைக் கண்ட குருடர்கள் போலத்தான் இருக்கிறது. எனவே, நமது கொண்டாட்டங்களும் அப்படிப் பட்டவை ஆகிவிடுகின்றன. ‘பாரதி 125’ ஐ எப்படிக் கொண்டாடுவது? இன்னமும் பரவலாக அறியப்படாத பாரதியின் உரைநடைகளை பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் எல்லாம் இளைய தலை முறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கவிஞன், பத்திரிகையாளன் என்று மட்டும் பாரதி அறிமுகம் செய்யப்படலாகாது. காந்தியைப் போல, நேருவைப் போல, பெரியாரைப் போல, அம்பேத் கரைப் போல சமூக மாற்றத்துக்காக, மனித சமத்துவத்துக்காக முயற் சித்த சிந்தனையாளன் பாரதி. மற்றவர்கள் இயக்கம் கட்டினார்கள். பாரதியின் சூழலில், அவனே ஒரு நபர் இயக்க மாக இயங்கினான்.இந்தி ‘முன்னாபாய்’ சினிமா, காந்தியை இளம் ஜீன்ஸ் தலைமுறைக்கு நெருக்கமானவராக ஆக்கியது போல, எல்லாத் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்க மானு டத்தைக் கூவி அழைக்கும் பாரதியை ‘நம்ம ஆளு’ என்று இன்றைய இளை ஞர்களை உணரச் செய்யும் முயற்சிகளில் சக படைப்பாளிகள், கலை ஞர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் இறங்க வேண்டும்!

பாரதி தரிசனம் - கற்பக விநாயகம்

ரிசல் சீமையில் உதித்த குறிப்பிடத்தகுந்த ஆட்களில் ஒருவரான பாரதியார் முதன்முதலில் எனக்கு அறிமுகமானது 'ஓடி விளையாடு பாப்பா ' பாடல் மூலம்தான். அதில் சின்னஞ்சிறு குழந்தைக்கே கூட 'சாதிகள் இல்லையடி பாப்பா ' என்று அழகாய்ச் சொல்லி இருப்பார் அவர்.
பின்னாளில் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலும், பின் அவரின் கவிதை, கட்டுரை, சிறுகதை நூல்களிலும் மனதைப் பறிகொடுத்த காலமும் இருந்தது. அவரின் சொல்லிலும் செயலிலும் முற்போக்கைத் தரிசித்தபடி இருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன், ராம கோபாலன் போன்ற இந்து மத வெறி பரப்பும் ஆட்களும், 'பாரதியின் பாடல்களைப் படித்த பிறகே தாம் ஆர் எஸ் எஸ் இல் சேர்ந்ததாக 'ச் சொன்னார்கள். திருவல்லிக்கேணி பாரதியார் வீட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்கள் நடத்திய பாரதி விழாவில் புகுந்து, ராம கோபாலனின் ஆட்களான இந்து முன்னணியினர் தாக்குதல் தொடுத்தபோதுதான், எனக்கு சில சந்தேகங்கள் தோன்றின.
உண்மையில் பாரதி யார் ?
வே.மதிமாறன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் 'தலித் முரசு ' பத்திரிக்கையில் 'பாரதி ய ஜனதா பார்ட்டி ' எனும் தொடரை எழுதத் தொடங்கினார். அத்தொடர், எனக்குள் இருந்த பாரதி பற்றிய பிம்பத்தை மாற்றி அமைத்து விட்டது.
அது வரை 'பாரதி நாம சங்கேர்த்தனம்! கோவிந்தா! கோவிந்தா! ' எனப் பஜனை பாடிக்கொண்டிருந்த சி பி ஐ / சி பி எம் / தேசியம் / அழகியலை மட்டும் எழுதிச் செல்லும் 'அக மன உழைச்சல் ' கவிஞர்கள் / இந்து தேசியவாதிகள் எவரிடம் இருந்தும் அத்தொடருக்கோ / அத்தொடர் நூலான பிறகோ 'உருப்படியான ' மறுப்பு எதுவும் வரவே இல்லை. எல்லா பாரதி பக்தர்களும் 'கள்ள மவுனம் ' அனுசரித்தார்கள்.
சமீபத்தில் வாலாஜா வல்லவன் எனும் எழுத்தாளர் 'திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதி ' எனும் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நூல் இதுவரை நடந்த பாரதி ஆய்வுகளிலேயே ஆகச் சிறந்ததாய் ஆதாரங்களுடனும், பாரதியின் சம கால வரலாற்று அறிவுடனும் எழுதப்பட்டுள்ளது. அந்நூல் பாரதியின் பன்முக ஆளுமைகள் பலவற்றையும் ஆழ ஆராய்கின்றது. எனது இந்தக் கட்டுரையில் உள்ள பல ஆதாரங்கள் வாலாஜா வல்லவனின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
'பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் ' என்று மற்றும் ஓர் பாரதி ஆய்வு நூல் (எழுதியவர்கள்: வே.மதிமாறன் & மருதய்யன்) தற்போது வெளிவந்துள்ளது. அந்நூலில் இருந்தும் சில ஆதாரங்களை இக்கட்டுரையில் எடுத்தாண்டுள்ளேன்.
****
பாரதி பற்றிய புனிதச் சித்திரம் எல்லோர் மனதிலும் பள்ளிப்பருவத்தில் இருந்து மகாகவி என்றும் தேசியக் கவி என்றும் ஏற்றப்பட்டுள்ளது.
கல்கி, வ.ரா. காலத்தில் பாரதி மகா கவியா ? தேசியக்கவியா ? எனும் மயிர் பிளக்கும் வாதத்தில் இறங்கியுள்ளனர்.
அவரை விமர்சனம் செய்வதையே நிறையப்பேரால் நினைத்துக்கூடப் பார்க்க முடிந்ததில்லை. கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமியிடம் சொன்னாராம்- 'பாரதி,கம்பன் ஆகியோரைப் பழித்துப் பேசுபவர் வீட்டில் கை நனைக்க மாட்டேன் '.
ஜீவாவால் கண்மூடித்தனமாய் பாரதி பஜனை ஆரம்பித்து வைக்கப்பட்டு அம்மரபு இன்று வரை தொடர்கிறது சிபிஐ சிபிஎம் அணியில்.
கம்யூனிஸ்ட்களும், இந்துத்துவவாதிகளும், காந்தியவாதிகளும் சேர்ந்து மாரடித்ததால் பாரதி பற்றிய புனிதர் பிம்பம் நம் சமூகத்தில் வலுவாக வேரூன்றி உள்ளது.
****
அவர் வளர்த்த முறுக்கு மீசைக்குக் கூட ஒரு முற்போக்கு இமேஜை, வெண்ணெய் வெட்டி சிப்பாய்கள் உருவாக்கி இருந்தனர்.
பிராமணர்கள் பொதுவாய் முகம் முழுக்க மயிர் நீக்கல் வழக்கமாய் இருக்க, அதை மீறி பாரதியார் வீரத்தின் அடையாளமாய் மீசை வளர்த்தார் எனும் முற்போக்கு வாதம் இது.
விசயம் என்ன என்றால் அது சுவாரசியமானது. பாரதியே அவரின் கட்டுரை ஒன்றில் சொல்கிறார். காசியில் தன் அத்தை வீட்டில் இருந்து கொண்டு, ஜய நாராயண கலாசாலை எனும் பள்ளியில் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த காலத்தில், தினமும் முகம் மழிப்பாராம். அவருடன் இருந்த பள்ளித் தோழர்களுக்கு இது விநோதமாய் இருந்துள்ளது. வட இந்திய பிராமண நண்பர் ஒருவர் கேட்டே விட்டாராம் 'உங்க வீட்டிலே தினமும் யாராவது இறந்து விடுகிறார்களா ? ' என்று. பாரதிக்கு விளங்கவில்லை. நண்பர் விளக்கினாராம். பிராமணர்கள், தம் வீட்டில் இழவு விழுந்தால் மட்டுமே முகம் மழிப்பர் என்றாராம். பாரதியும், அன்றிலிருந்து மழிப்பதை விட்டு விட்டு, அசல் ஆரிய வர்த்தப் பிராமணராக மாறியதுதான் இந்த மீசை விவகாரம். (ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள், வானதி பதிப்பகம்)
****
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து சமூக சீர்திருத்தவாதிகள் குரல் கொடுத்துள்ளனர். ஆங்கில அரசும் இதைத் தடுக்கச் சட்டம் போட்டுள்ளது. ஆனால் நம் பாரதியோ 'சதி 'யை ஆதரித்து 1910 பிப்ரவரியில் 'கர்ம யோகி ' இதழில் எழுதுகிறார் - ' நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரீகளே மஹா ஸ்திரீகளாவார்கள் '.
பெண் விடுதலையை என்னமாய்ப் பொளந்து கட்டியிருக்காரு. எரித்துப் போட்டு ஆவி 'விட்டு விடுதலையாகி ' சிட்டுக்குருவி போலப் பறத்தலையே ஒரு வேளை பெண்ணின் விடுதலை என்றிருப்பாரோ தெரியவில்லை!
சரி கிடக்கட்டும் இது ரொம்பப் பழசான விஷயம்.. இப்போல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க இந்துக்கள் என்று நினைத்தால் அந்த நினைப்பிலும் மண்ணைப் போட்டு விட்டது..அக்டோபர் 28, 1987ல் ஜெய்ப்பூரில் 'தர்ம ரக்ஷ சமிதி ' என்ற அமைப்பின் தலைமையில் மாபெரும் 'சதி ஆதரவு ஊர்வலம்.
(அதே 1987ல் செப்டெம்பர் 4ல் ராஜஸ்தானில் தியோலாரா கிராமத்தில் ரூப் கன்வர், தனது கணவனின் பிணத்துடன் உயிருடன் வைத்து எரிக்கப்பட்டார்).
சரி.. தர்ம ரக்ஷ சமிதி என்பது எங்கோ இருக்கும் ராஜஸ்தான் காரங்களோடதுதானே என ஆறுதலும் பட முடியவில்லை. ஏன் எனில், இதே அமைப்பின் தமிழகப் பிரிவிற்கும் ஆட்கள் இருந்தாங்க..பத்மா சுப்பிரமணியம் எனும் நாட்டியப் பேரொளியும், சங்கராச்சாரியாரும்தான் அவர்கள். அந்த சதி ஊர்வலத்தில் ரூப்கன்வரை, சீதை, அனுசூயா போன்ற சதி மாதாக்களோடு ஒப்பிட்டும், சதியை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த சதி ஆதரவு அமைப்புக்கே மூல வேர், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவரான ஆச்சாரிய தர்மேந்திராதான்.
தற்போதைய ராஜஸ்தான் முதல்வரின் அம்மா, விஜயராஜே சிந்தியா (இவர் பி ஜே பி யில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்) 'உடன்கட்டை ஏறுவது கற்புடைய பெண்டிரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது ' என்று சொன்னார். எம் ஜி ஆர் இறந்தபோது ஜெயலலிதாவும் தனது உடன்கட்டை ஆசையை வெளிப்படுத்தியவர்தான்.
இந்து மதத்தின் பிற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றிணையும் இடமான 'சதி ' பஜனையில் பாரதியும் சேர்கிறார்.
****
பாரதி, தன் சுய சாதி அபிமானமும், அதன் மேன்மை சரிவதால் மனம் நொந்தும் இருந்தவர்தான், என்பதை அவர் எழுத்துக்கள் பல சாட்சியாய் உள்ளன.
1910ல் தமது சுயசரிதையில் தன் தந்தையைப் பற்றி எழுதுகிறார் 'பார்ப்பனக்குலம் கெட்டழிவு எய்திய பாழடைந்த கலியுகம் ஆதலால் வேர்ப்பப் பொருள் செய்வதொன்றையே மேன்மை கொண்ட தொழில் எனக்கண்டனன் '.
பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என மனுதர்மம் சொல்லி இருக்கிறது. ஆனால் தந்தையோ உடல் வேர்க்க வேலை செய்ய நேர்ந்ததே என நொந்து கொள்ளும் சாதியபிமானம் குறிப்பிடத்தக்கது.
'கண்ணன் என் தந்தை ' பாடலில் 'நாலு குலங்கள் அமைத்தான்- அதை நாசமுறப் புரிந்தனர் மூடமனிதர் ' என்று நான்கு வர்ணங்கள் சிதைவதை ரொம்ப வருத்தப்பட்டு எழுதுகிறார்.
'கடல் மேல் வருணாசிரமப் பாலம் ' என்ற கட்டுரையில் பாரதி 'குலத்தளவே ஆகுமாம் குணம் ' என்பதோடு 'அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்ளுகிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை ' என்று அவர் சொல்லும் இடத்தில்தான் குலக்கல்வி கொண்டு வந்த ராஜகோபாலாச்சாரியும், அதனை ஆதரித்து எழுதும் ம.ம.வும் ஒன்றிணைகிறார்கள்.
டாக்டர் டி எம் நாயர் 1917ல் சென்னை ஸ்பர்டேங்க் இல் (சேத்துப்பட்டில் உள்ள குளக்கரை) நடைபெற்ற பஞ்சமர் மாநாட்டில் பார்ப்பனர்களைக் கடுமையாய் விமர்சனம் செய்து பேசினார். பாரதிக்குக் கோபம் கொப்பளித்தது. 'சென்னைப் பட்டிணத்தில் நாயர், கக்ஷிக் கூட்டமொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம் ', 'என்னடா இது! ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக்கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும்வரை சென்னைப்பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! ' எனக் கோபத்தில் புலம்புகிறார்.
****
பாரதியார், பிரிட்டிஷ் போலீசாரின் கைதில் இருந்து தப்பிட பாண்டிச்சேரிக்குப் போய் நீண்ட காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை மாகாணத்துள் திரும்பும் வேளையில் திருப்பாதிரிப்புலியூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுக் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாரதியார், 'தமக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பெல்லாம் கிடையாதென்றும், சென்னை மாகாணத்துக்குள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்கப் போவதாயும், ஆங்கிலேயப் பேரரசர் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்தித்து ' ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு கடலூர் சிறையின் 25 நாட்களை எண்ணியபடியே விடுதலை வாங்கித் தர உதவியவர்களில், சர் சி பி ராமசாமி அய்யர் முன்னணியில் இருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக அறியப்படும் பாரதி, சரணடைந்த நபர், ஆங்கிலேயருக்குப் பெரிய அளவில் விசுவாசம் கொண்டு அவ்விசுவாசத்திற்காக 'சர் ' பட்டம் வாங்கியவர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.(அய்யரின் மற்ற செய்திகள் எனது பிற கட்டுரைகளில் பதிவாயுள்ளன. (1) கல்பாத்தித் தெருக்களில் பஞ்சமர் நடக்கக்கூடாது எனும் செயலை ஆதரித்தமை 2) கே. ஆர். நாராயணனுக்கு அரசு வேலை கிடைக்க விடாமல் செய்த தந்திரங்கள்)
****
இன்று பாரதம் முழுக்க ஒரே பண்பாடு என்பதை லட்சியமாகக் கொண்டு, பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்க முனையும் ஆர் எஸ் எஸ் ஸிற்கு முன்னோட்டமாக, தலித் பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் பாரதி, 'எந்த ஜாதியாக இருந்தாலும் சரி, அவன் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூணூல் போட்டுக் காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுத்து விட வேண்டும் ' என்று சொல்லி இருக்கிறார்.
இதே மாதிரியான வேலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் தற்போது இறங்கி இருப்பதை புதுவை சரவணன் எனும் இந்துத்துவவாதி திண்ணையில் அனைவருக்கும் சமஸ்கிருதம் கற்றுத்தருவதாகவும், புதிதாய் 20000 பேர் சம்ஸ்கிருதத்தில் பேசுவதாகவும் சொல்லி இருந்தார்.
பாரதி சொன்ன 'பூணூல் புரச்சி 'யும் இப்படித்தான். மேல் சாதிக்காரனிடம் உதை வாங்க, பூணூல் மாட்டினால் என்ன ? மாட்டாட்டி என்ன ?
தலித் மக்கள் மதம் மாறிவிடக்கூடாது என்பதில் குறியாய் 'அவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள்! மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டைச் செட்டியார்களே! இந்த விசயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள்! ' என்று தலித்களுக்கு 'விபூதி ' நாமம் சாத்த அலையாய் அலைந்திருகிறார் பாரதி. மதத்தை மாற்றிக்கொள்ளாமல் இருக்க லஞ்சம் கொடுத்தாவது சரிக்கட்ட யோசனை சொல்லி இருக்கிறார். இயற்கை சதி செய்து விட்டதால் 1921லேயே இறந்து விட்டார். அவர் சென்று ஐக்கியமாக வேண்டிய ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்க இன்னும் 4 ஆண்டுகள் இருந்தன.
அதே நேரத்தில், மாட்டுக்கறி தின்பதால் தலித்கள் ஒதுக்கப்பட்டதை நியாயம் என்றும் சொல்லி இருக்கிறார் பாரதி. 'ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள்.ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பதைக்கண்டு ஜாதிப்பொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம் ' (ஆதாரம்:- சோசலிசக்கருத்துகளும்,பாரதியும், கோ.கேசவன்)
****
பாரதி 'சந்திரிகையின் கதை ' யில் மனு நீதியை ஆதாரம் காட்டி, பார்ப்பனர்கள் எந்த சாதியில் வேண்டுமானாலும் பெண் எடுக்கலாம் என்று எழுதி உள்ளார். ஆனால் பார்ப்பனப் பெண்களைப் பிற சாதியில் திருமணம் செய்விக்கப் பாரதி எதிர்ப்பாகவே இருந்துள்ளார் என்பதைப் பின்வரும் சான்று மூலம் அறியலாம். (மனு தர்மமும் அதைத்தானே சொன்னது. பிராமண ஆண் எந்த வர்ணத்துப் பெண்ணுடனும் உறவு கொள்ளலாம். ஆனால் பிராமணப் பெண்ணுக்கு இது பொருந்தாது)
'பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் பாரதியும், நாராயணப்பிள்ளையும் கலப்புத்திருமணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். திடாரென்று நாராயணப்பிள்ளை, பாரதி நாம் இருவரும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் பழகி வருகிறோமே! உங்கள் மகள் சகுந்தலா பாப்பாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால்தான் என்ன ? என்று கேட்டார். பாரதி சற்று உஷ்ணமாகவே கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்விக்க வேண்டியது. அதன் பிறகு பாப்பா திருமணத்தைப் பற்றிப் பேசலாம் ' என்றார். பிள்ளையும் பாரதியும் கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தார்கள். முடிவில் பாரதி, 'விடுவிடு ' என்று தம் வீடு போய்ச்சேர்ந்தார். அப்போது காலை 11 மணி இருக்கும்.
நாராயணப்பிள்ளை செல்வந்தரானதால் அவரது நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவும் ஊரார் பயப்படுவார்கள்.மனைவியை இழந்த அவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு பிராமணரின் மனைவியைத் தம் வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம்,லாபம் இரண்டையும் கருதி அதைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.
வீட்டுக்கு வந்த பாரதி மனம் நொந்து திண்ணையில் அமர்ந்திருந்தார். அச்சமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போனார். பாரதி திண்ணையிலிருந்து குதித்து அர்ச்சகரிடம் ' உன் போன்ற மானங்கெட்டவர்களின் செய்கையால்தானே நாராயணப்பிள்ளை என்னைப் பார்த்து அக்கேள்வி கேட்கும்படி ஆயிற்று ' என்று சொல்லி, அவர் கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டார். அர்ச்சகர் அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி நாராயணப் பிள்ளையிடம் முறையிட்டார். நாராயணப்பிள்ளைக்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டது. தன் வேலையாள் ஒருவனை அனுப்பி, பாரதியின் மைத்துனர் அப்பாதுரையை வரச்சொன்னார். பதறிப்போய் விரைந்து வந்த அப்பாத்துரையிடம் இன்று இரவுக்குள் பாரதியைக் கடயத்தை விட்டு வெளியேற்றாவிட்டால், ஆட்களை ஏவி அவரை இரவே தீர்த்துக் கட்டிவிடப் போவதாக எச்சரித்தார் நாராயணப்பிள்ளை.
பாரதி வீட்டில் ஒரே குழப்பம்.கலக்கம்.முடிவில் பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பத்தீர்மானித்தார்கள்.விடியற்காலை நாலு மணிக்கு வரும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்குக் கூடக் காத்திராமல், பிற்பகல் 2.30 மணிக்கு வரும் செங்கோட்டை பாசஞ்சரில் அவசர அவசரமாக மூட்டை
முடிச்சுகளுடன் அவரை ஏற்றி அனுப்பினார்கள். இது 1920 நவம்பர் மாதம் நடைபெற்றது. ' (சித்திர பாரதி, ரா.அ.பத்மநாபன்,பக்கம் 164)
பாரதி சொன்ன 'சாதிகள் இல்லையடி பாப்பா ' வெறும் பாட்டு மட்டும்தானா ?
****
நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட பிறகு தமிழ் நாட்டில் அக்கட்சியில் மட்டுமன்றி காங்கிரசுக் கட்சியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முழக்கம் சமூக நீதிக்காக முன் வைக்கப்பட்ட சூழல் அது. சமூக நீதியை விரும்பும் அனைவரும் பெரியார் முதல் வ.உ.சி. வரை ஒரே குரலில் ஒலித்தபோது, பாரதியார் 1921 சனவரி 19ல் சுதேசமித்திரனில் ' வகுப்புவாரிப்பிரதி நிதித்துவம் முறையை ஒழித்துவிட வேண்டும். அது வெறும் சதி, ஏமாற்றென்பது ருஸூவாய் விட்டது.பிராமணரல்லாதாருக்குத் தனியாக ஸ்தானங்கள் ஏற்படுத்தியது புத்தியில்லாத குழந்தை விளையாட்டனறி மற்றில்லை ' எழுதியுள்ளார்.
பாரதி வகுப்புரிமையை எதிர்த்த காரணம் அது பார்ப்பனர்களுக்குப் பாதகமாக இருந்தது என்பதால்தான். பாரதி தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்த காலத்தில் வகுப்புரிமையை எதிர்த்ததாகச் சிலர் சொல்வது தவறு. இதை எழுதும் முன்பே கடலூர் ஜெயிலில் கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு, தீவிர வருணாசிரம ஆதரவாளராக விளங்கினார்.
ஆனால் இவரை விட மிகத்தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பாளரான வ.உ.சி. 1920லேயே வகுப்புரிமையை ஆதரித்து திருநெல்வேலி காங்கிரசில் தீர்மானம் கொண்டு வந்தார். அது வருமாறு: 'இந்த மாநிலத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு பொது வேலைகளிலும், கெளரவ உத்தியோகங்களிலும் பிராமணர், பிராமணரல்லாத சமூகங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் ' (இந்து 25/6/1920)
****
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது 13/4/1919ல். அந்நேரத்தில் பாரதி ஆங்கில ஆட்சிக்கு மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, ஆங்கில அரசின் விருப்பப்படி கடயத்தில் வசித்து வந்தார். (மன்னிப்புக் கடிதம் கொடுத்து ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதில் பாரதியும், வீர சாவர்க்கருக்கு சளைத்தவரல்லர்).
'நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திரமும் இன்றி வஞ்சனை செய்வாரடி ' என காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி, இப்படுகொலை நடந்தபோது 'அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு ' கடையம் ஊரில் பேனாவுக்கு மையில்லாமல் இருந்த கதை என்ன ?
ஆனால் வ.உ.சி. இக்கொலையை வன்மையாகக் கண்டித்துள்ளார். அன்னிபெசண்ட் இதை ஆதரித்து 'செங்கல்லால் அடித்தவர்களை, இரும்புக்குண்டால் அடித்தார்கள். இதிலென்ன தவறு ? ' எனறு கேட்டவர். இவ்வாறு கேட்ட அன்னிபெசண்டின் ஹோம்ரூல் இயக்கம், பார்ப்பனர் நலனுக்கு ஆதரவாய் இருக்கவே, பாரதியும் திலகரும் இவ்வியக்கத்தினை ஆதரித்தனர். ஆனால் வ.உ.சி.தான் இந்த அம்மாள், ஆங்கிலேயரின் கையாள் என்பதைப்புரிந்து கொண்டு, அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதி உள்ளார்.
****
காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை சத்திய மூர்த்தி அய்யர் எதிர்த்தார். சட்டசபையைப் புறக்கணித்தல் எனும் இந்த ஒத்துழையாமையைப் பாரதியும் எதிர்த்து 'பதவிகளைப் புறக்கணித்தல் சாத்தியமில்லை ' என எழுதிய அதே காலகட்டத்தில்தான், பெரியார் காங்கிரசில் சேருகிறார். அவர் ஈரோடு நகரசபைத் தலைவர் பதவியைத் துறந்தார். நீதிமன்றத்தினைப் புறக்கணித்த காரணத்தால், வியாபாரத்தில் அவருக்கு வந்து சேர வேண்டிய ரூ50,000 (1919ல் இது மிகப்பெரும் தொகை)ஐ இழந்தார். வக்கீல் சேலம் விஜயராகவாச்சாரியார் 'வழக்கை வேறு பெயருக்கு மாற்றிக்கொடும். நான் இனாமாகவே வாதாடிப் பணத்தை வசூலித்துத்தருகிறேன் ' என்று பெரியாரிடம் சொன்னபோது பெரியார் சொன்னது 'அது நெறியற்ற செயல் '.
பாரதியின் ஒத்துழையாமை எதிர்ப்பைப் பிரதிபலித்த இந்து பத்திரிக்கை தெளிவாய் அதன் சாதி நலனை விளக்கி எழுதியது 'கல்வி, நீதிமன்றம், சட்ட மன்றம் ஆகியவற்றைப் புறக்கணித்தால் அதிகாரம் பார்ப்பனரல்லாதோர் கைக்குப் போய் விடும் '.
****
பாரதியிடம் கம்யூனிசத்தைத் தொட்டுத் தடவி உச்சி மோந்து கொண்டாடும் சிபிஐ, சிபிஎம் அணியினருக்கு, அவர் உண்மையிலேயே ரஷ்யாவில் நடந்த 1917 பிப்ரவரி புரட்சியைத்தான் பாடினார் என்பதும், லெனினின் 1917 அக்டோபர் புரட்சியைப் பாடவில்லை என்பதும் தெரியாதா என்ன ?
லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்து, நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, 'இந்த முறைமை பலாத்காரங்களின் மூலமாக உலகில் பரவி வருவது எனக்கு ஸம்மதமில்லை ' என்று பாரதி கண்டித்ததோடு லெனினைத் திட்டி 'கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன் ' என்கிறார். புரட்சித்தலைவர் லெனினை மூடன் என்று சொன்னால்தான் என்ன ? நமக்குத்தான் சீட்டுத் தர நம்ம ஊரின் புரட்சித்தலைவர் இருக்கிறாரே என்று இந்தப் பஜனை மண்டலிகள் சமாதானம் அடைந்திருக்கலாம்.
'உழுபவனுக்கே நிலம் சொந்தம் ', என இயக்கம் நடத்தியவர்களுக்கு பாரதி 1921ல், சென்னை மாகாண நிலப்பிரபுக்களுக்கு அரசு நிலத்தீர்வையைக் கூட்டியவுடனே 'இது லெனினுடைய கொள்கையில்தான் போய் முடியும், பூஸ்திதிகளை (நிலங்களை) எல்லாம் பறித்துக்கொண்டு உடையவரைத் தெருவில் விட வேண்டும் என்ற கொள்கை ' என்று எழுதியது தெரியாதா என்ன ?
****
பாரதி எழுதுகிறார் 'திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாபதி யொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல், யாதொரு சண்டையுமின்றி, தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான் '.
ஆனால், உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததாய் வரலாற்று ஆதாரம் ஏதுமில்லை. மாறாக திப்பு, பார்ப்பனர்களை ஆதரித்த செய்திதான் கிடைத்துள்ளது.
திப்புவின் ஆட்சியில் அரசுப்பணியில் இருந்த பார்ப்பனர்கள், தவறு செய்தால் கூட அவர்களைத் தண்டிக்கும் உரிமையை திப்பு ஏற்காமல், அவ்வுரிமையை சிருங்கேரி சங்கராச்சாரியிடமே ஒப்படைத்துள்ளான்.
1791ல் திப்பு சிருங்கேரி மடத்துக்கு எழுதிய கடிதம் இதோ:
'There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offene like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras. '
இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க சாஸ்தரா சண்டி ஜெபம் நடத்த, திப்பு சங்கராச்சாரியைக் கேட்டுக்கொண்டான். ஓராயிரம் பார்ப்பனர்கள்,40 நாட்கள் ஜெபம் செய்தனர். முழுச்செலவையும் திப்பு ஏற்றுக்கொண்டான்.
பாரதிக்கு இஸ்லாமியர் மீது இருந்த வெறுப்பின் அடையாளமே மேற்கண்ட அவதூறு எழுத்து.
இவ்வெறுப்பின் உச்சத்தை 'சிவாஜி தன் சைனியத்துக்குக் கூறியது ' பாடலில் பரக்கக் காணலாம்.
****
கிறிஸ்தவ மதத்தை அவதூறு செய்வதில் பாரதி, ம.ம.வுக்கெல்லாம் தாத்தாவாக விளங்கினார்.
'சாதிக்கொடுமையில் இருந்து விட்டால் போதும் சாமி ' என்று தலித்கள் வேதக்கோவிலுக்கு ஓடிக் கொண்டிருந்தது, பாரதியால் ஜீரணிக்கவே முடியாமல் இருந்துள்ளது. பேனாவைத் தூக்கி 'ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் ஜாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தொல்லைப்படுவேயன்றி அழிந்து போய் விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள் இன்னும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை ' என்று சாதிக்கொடுமையை ஜாக்கி வைத்துத் தூக்கிப் பிடித்து, 'இப்போது நம்முடைய தேசத்தில் இருக்கும் தாழ்ந்த ஜாதியார்களை யெல்லாம் கிறிஸ்துவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுதான் நம்முடைய குடியைக் கெடுக்கும் கோடாலியாக இருக்கும் ' என்று எழுதுவது, மகாகவி பாரதியார்.
சில நண்பர்கள் நினைக்கக்கூடும், அவர் ஆரம்பத்தில் நல்ல முற்போக்காத்தான் இருந்தார். பாண்டிச்சேரி போய் வ.வே.சு. அய்யர் சகவாசத்தினாலே இப்படிக் கெட்டுப் போயுட்டார் என்பர். (வ.வே.சு. அய்யர் சேரன்மாதேவியில் நடத்திய தனிப்பந்தி ஆசிரம விவகாரத்தை என்னுடைய 'வரலாற்றை எழுதுவதை முன் வைத்து ' கட்டுரையில் காண்க). இருக்கலாம். முன்னிலும் தீவிர இந்துத்துவவாதியாய் அய்யரின் சகவாசம் மாற்றியிருக்கலாம். பாண்டிச்சேரி போகும் முன்பும் பாரதியிடம் பிற்போக்குத்தனம் குடி இருந்தது என்பதை 18/8/1906 இல் அவர் 'இந்தியா ' பத்திரிக்கையில் 'மிசன் பள்ளிகளை விலக்கி வைத்தல் ' எனும் கட்டுரை தெளிவாக்குகின்றது.
அதில் அவர் 'கிறித்தவ மிசன் பள்ளிகளில் படிப்பவர்கள், இந்து மதக் கடவுள்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மாட்டார்கள்- அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறி விடுவார்கள் ' என்று எழுதி உள்ளார்.
1909ல் இஸ்லாமியர்கள் தேசபக்தி அற்றவர்கள் எனும் பொருள்பட கார்ட்டூன் போட்டுள்ளார்.
****
வேதத்தையும், சமஸ்கிருதத்தையும் தூக்கிப்பிடித்த பாரதியிடம் இருந்து 'அவர் ஏன் வள்ளலாரைப் பற்றி ' எழுதவில்லை என்பதோ, கால்டுவெல்/ஜி.யூ.போப் பற்றியோ, மனோன்மணீயம் சுந்தரனாரைப் பற்றியோ ஏன் எழுதவில்லை என்பதோ புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
ஆனால் சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என எழுதிய மாக்ஸ்முல்லரைப் பாரதி எழுதியதும் ஆச்சரியமில்லாத ஒன்றுதான்.
****
ஆ.ரா.வேங்கடாசலபதி தொகுத்த 'விஜயா ' கட்டுரைகள் நூலில் கண்ட செய்தி, பாரதியின் சாதிச்சங்க ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றது.
பாரதி மறைவதற்கு 4 மாதங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ஒரு பிராமண சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது பற்றிய ஒரு விரிவான பதிவு 'சுதேசமித்திரனிலிருந்து ' மறுபதிப்பிடப்பட்டுள்ளது. எம்.கே. ஆச்சாரியாரின் பேச்சும், கூட்டத் தீர்மானங்களும் மட்டுமே சுதேச மித்திரனில் விரிவாகப் பதியப் பெற்றிருக்கின்றன. 'ஆரம்பத்தில் வெகுசிலரே வந்திருப்பினும், பின்னிட்டு ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி கர்ஜிக்க ஆரம்பித்தவுடனே 200 பேருக்குமேல் கூடிவிட்டார்கள் ' என்றும், கடைசியில் 'ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி பொதுவாக பிராமணரல்லாதார் இயக்கத்தின் அஸ்திவாரக் கொள்கையையும், போலி வாதங்களையும் நிர்த்தூளியாக்கியபின் சபை கலைந்தது.
பரம வைதீகரும், தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவை எதிர்த்தவரும், குழந்தைத்திருமணத்தைத் தீவிரமாய் ஆதரித்து இயக்கம் கண்டவரும், வர்ணாசிரம தர்மத்தின் பாதுகாவலராகச் செயல்பட்டவருமாகிய எம்.கே. ஆச்சாரியாவுடன், பாரதியார் மேடையைப் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
****
பாரதியார், நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், 'வேதத்தைத் தவறாக உச்சரிப்பவனை விட, ஒழுங்காகச் சிரைப்பவன் மேல் என்று கூறு ' என்று சொல்லி உள்ளார். இதில் முடி திருத்தும் செயலைத் தாழ்வாக, ஆதிக்க சாதித்திமிரோடு ஏளனப்படுத்திப் பார்க்கும் போக்கு கவனிக்கத்தக்கது.
இதையெல்லாம் சொல்லும்போது அப்பாவியாய், அவர் தலித் ஒருவருக்குப் பூணூல் அணிவித்தாரே எனும் கேள்வி எவருக்குமே தோன்றும். இதில் கூட தன் ஆதிக்க சாதி அடையாளத்தை (பூணூல்) விட்டுக்கொடுக்க மறுக்கும் மனப்பான்மை தெரிவது கண்கூடு.
இதே லாஜிக்கில் தான் மரக்கறி உணவு உண்ணும் சாதி இந்துக்கள் தம் உணவுக் கலாச்சாரத்தை மாட்டுக்கறி/ பன்றிக்கறி உண்பவர்கள் மேல் திணிப்பதும், கிராம தேவதைகளைக் கெடா வெட்டி வணங்கும் பூசாரிகளுக்கு சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயலும் நடக்கிறது.
****
பாரதியின் ஊரில் இருந்து 20 கிமீக்குள் வாழ்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளை எதிர்த்துப் போரிட்ட கட்ட பொம்மனைப் பற்றி அவர் ஒன்றும் எழுதவில்லை. இதற்கு ஆய்வாளர் ஆ.ரா.வேங்கடாசலபதி தரும் காரணம் பொருத்தமாய் உள்ளது. கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்ப ஜமீன்தாரின் சந்ததிக்கு பாரதி நண்பராய் இருந்ததும், கடைசிக் காலத்தில் அந்த ஜமீனுக்கு முதுகு சொரிந்து சீட்டுக்கவி எழுதுவதற்கும் இடைஞ்சலாய் இல்லாமல் இருக்க, கட்டபொம்மனைப் பற்றி எழுதுவதை அவர் தவிர்த்திருந்திருக்கலாம் என சலபதி சொல்கிறார். அவரும் 'சில வேடிக்கை மனிதர்களைப் போல்தான் ' வீழ்ந்திருக்கிறார்.
****
கரிசல் வட்டாரத்தில் பிறந்த கட்டபொம்மன்,ஊமைத்துரை,சுந்தரலிங்கம்,தானாபதிப்பிள்ளை,வ.உ.சி,பாரதி ஆகியோர்கள் ஒரு வசதிக்காக அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பை வைத்து ஒப்பிடலாம்.
கட்டபொம்மன்,ஊமைத்துரை,சுந்தரலிங்கம் போரில் கொல்லப்படும் வரை தீவிரமாய் கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்த்தவர்கள். தானாபதிப்பிள்ளை, நாகலாபுரத்தில் கம்பெனியால் தூக்கில் கொல்லப்பட்டார். அவர் மாண்டபிறகும் கம்பெனிக்கு அவர் மேல் இருந்த வெறுப்பு குறையவில்லை என்பதற்கு, இறந்த பிள்ளையின் தலையை வெட்டி, பாஞ்சாலங்குறிச்சிக்குக் கம்பெனியார் அனுப்பி வைத்தது சான்றாகும். வெள்ளையனை விரட்ட, பஞ்சாலைத் தொழிலாளிகளைத்திரட்டி வேலை நிறுத்தமும், போட்டியாய் கப்பல் போக்குவரத்தும் நடத்திய சிதம்பரம் பிள்ளைக்குக் கடுங்காவல் தந்தது வெள்ளை அரசு. உள்ளங்கைத் தோல் உரிந்து ரத்தம் சொட்ட, சணல் கயிறு திரித்தவர் வ.உ.சி., கோவைச் சிறையில்.
வ.உ.சி.யின் மீதான நெல்லைச் சதி வழக்கில், அவருக்கு ஆதரவாய் சாட்சி சொல்வதாய் வாக்களித்திருந்த பாரதி, வாய்தா அன்றைக்கு எங்கு சென்றார் என்பது இன்னமும் புரிபடாத மவுனம். சென்னை எக்மோரில் ரயில் ஏறியவர், தஞ்சாவூர் வரை சென்றிருக்கிறார். அதன் பிறகு ஆள் காணவில்லை என்கிறது சி.ஐ.டி. ரிப்போர்ட்.
கவர்னருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதும்போது கூட தன் சுய சாதி அபிமானத்தை விட்டுக்கொடுக்காமல், பாரதி 'என்னைப் போன்ற (பிராமண) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது ', என எழுதி உள்ளார்.
நீதிக்கட்சிக் காரர்களை, 'வெள்ளையனை ஆதரிக்கும் தேசத்துரோகிகள் ' என்று சொன்ன பாரதி, 1920ல் தனது படைப்புகளைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கினார். அதனை ஆதரிக்கக் கோரி நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'என் மீது அரசாங்கம் விதித்திருந்த தடைகள் யாவும் நீக்கப்பட்டு விட்டன. ஆதலால், அரசாங்க அதிகாரிகளையும் கூட எனக்குக் கடன் கொடுக்குமாறு தாங்கள் கேட்கலாம் ' எனக் குறிப்பிட்டுத் தம் ஏகாதிபத்திய சமரச நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உள்ளார்.
நண்பர்கள் உதவவில்லை.
****
பாரதிகிட்டே ஒன்னுமே நல்ல விசயம் கிடையாதா என்று சிலர் கேட்கலாம்.
1) பெண்களை, வயசுக்கு வந்த பிறகே கல்யாணம் செய்து கொடுக்கணும் என்று தன் குலத்தவருக்கு போதித்தார். அவர் இதைச் சொல்லும் சூழலில்கூட உழைக்கும் மக்களிடையே வயசுக்கு வராத பெண்ணைக் கல்யாணம் செய்தல் வழக்கத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.
2) கார்ட்டூன் படங்களை தமிழ்ப் பத்திரிக்கையில் அறிமுகம் செய்தார். அதுவும் கூட அவரது பிற்போக்கு இந்து தேசியத்திற்குதான் உதவியது.
3) கவிதையை எளிய தமிழில் எழுதினார். அது எதற்குப் பயன்பட்டது ? புதிய மொந்தை, பழைய புளித்த கள்ளைத்தானே ஊற்றப் பயன்பட்டது!
4) இஸ்லாமியர் ஒருவரின் கடையிலே டா குடித்தார்.
****
vellaram@yahoo.com
திண்ணையில் கற்பக விநாயகம்