இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday, 25 May 2007

தில்லுமுள்ளுகளும் தள்ளுமுள்ளுகளும்-5

ப்படி இந்த நிலைக் கெட்ட மாந்தரைப் பார்த்து மற்றொருவர் வெகுண்டெழுந்த சம்பவம் ஒன்றினையும் இப்போது பார்போம். அதாவது பாரதி125பிரான்ஸ் விழாவிற்கான செயற்குழ அமைப்பதற்காக பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் அனுப்பிதாக சொன்னக் கடிதம் கடைசிவரை கிடைக்கப் பெறாதவர்களில் மற்றொருவர் திரு.கருணாநிதி அவர்கள். இவர் பிரான்ஸிலும் புதுவையிலும் இயங்கிவரும் தமிழர் இல்லத்தினை தோற்றுவித்து சுமார் இருபத்தைந்து வருடங்களாக நடத்தி வருகிறார். இவர் பிரான்சில் முதன் முதலில் புதுவை தமிழர்களுக்கென்று தமிழ் பள்ளிகூடம் ஆரம்பித்து இருபது ஆண்டுகளுக்கு மேல் நடத்தியவர். தமிழ்ப் பணியை தொடர்ந்து இன்னும் செய்து வருகிறார். சரி இவருக்கும் ஏன் கடிதம் கிடைக்கவில்லை ?

வர் ஒரு கடிதம் போட்டாருங்க 25 வருஷத்திற்கு முன்னால். அந்த கடிதத்தின் வேகம் இன்னும் குறையாததால், இவரையும் தவிற்க பாரதி125 விழாத் தலைமை முடிவுசெய்தது. அப்படி இன்னாங்க அது கடிதமுன்னு தானே நினைக்கிறீங்க? அந்த கடிதத்திற்கும் இப்போதைய தலைமை திரு.தசரதன் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்முன்னு தானே உங்களுடைய அடுத்த கேள்வி? சொல்கிறேன் சொல்கிறேன்.

பாரீஸில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் நடந்த சில சித்து விளையாட்டுகளை இப்போது பார்க்கலாம். முதலில் பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழாவின் செயற்குழு அமைப்பை பார்ப்போம்.

பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழாச் செயற்குழு அமைப்பு :

தலைவர் : திரு. திருஞானசம்பந்த மூர்த்தி

துணைத்தலவர் : திரு. லேகல்

பொதுச்செயலாளர்: கருணாநிதி

துணைச் செயலாளர்: இராஜ சூரியர்

பொருளாளர்: சவியே கிரிஸ்தோப்

துணைப்பொருளாளர்: எத்துவால் பக்தா

வெளித்தொடர்பு: ஜமால், தசரதன், பஸ்கால், மன்ன மரைக்கார்

ல்லா கவனிங்க திரு.தசரதன் எதில் உள்ளார் என்று. வெளித்தொடர்பில் நாங்கு பேரில் ஒருவராக. ஆனால் அவர் இந்தியா சென்ற அங்கு செய்தியாளர்களிடம் தன்னை எப்படி கூறிகொண்டார் என்பதைப் பார்ப்போம். மேலும் இந்த செயற்குழு அமைப்பில் திரு.நசீர் என்பவரின் பெயர் எங்குமே காணப்படவில்லை இல்லையா? ஆனால் நசீர் என்பவரும் தமிழ்நாட்டு செய்தி தாள்களில் இடம் பெற்றுள்ளார். எப்படி ?


தினத்தந்தியில் 14.08.1982ல் வெளியான செய்தியை பார்த்தால் பல வேடிக்கைகள் விளங்கும். செய்தியின் தலைப்பு :
பாரீஸ் நகரில்
பாரதி நூற்றாண்டு விழா
ஏற்பாடுகள் தீவிரம்
சில சுவையான செய்திகளை மட்டும் பார்ப்போம்.
"பாரீஸ் பாரதி விழா குழு தலைவர் திருஞானசம்பந்த மூர்த்தி, மன்றக்குழு அமைப்பாளர் தசரதன், நசீர் ஆகியோர் சென்னை வந்துள்ளனர்."
"திருஞானசம்பந்த மூர்த்தி, ஜமால், தசரதன், நசீர் ஆகியோருக்கு பாரதி இளைஞர் சங்கத்தின் சார்பில் நல்லபெருமாள் பொன்னாடை போர்த்தினார்."
"பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பாரீஸ் பாரதிவிழா அமைப்பாளர் தசரதன் பேசுகையில், பல்வேறு நாடுகளில் நவம்பர், டிசம்பர், மாதங்களில் பாரதி நூற்றாண்டு விழா நடைபெறும். அவற்றுக்கெல்லாம் சிகரமான விழாவாக டிசம்பர் மாதம் பாரீஸ் நகரில் அகில உலக பாரதி நூற்றாண்டு விழா நடைபெரும்"
இதாங்க தினத்தந்தியில் வந்த செய்திகள். அதாவது பிரான்சில் இருக்கும் போது பத்தோடு பதினொன்றாக வெளித்தொடர்புக் குழுவில் இருந்த தசரதன், இந்தியா சென்றவுடன் விழா அமைப்புக்குழுவின் தலைவராகி விட்டார் என்பது தான் எப்படி? என்று விளங்கவில்லை. அது மட்டுமல்ல தனக்கு நெருங்கியவர் என்ற ஒரே தகுதியை தவிர விழாவிற்கு சம்பந்தமில்லாத நசீருக்கு பொன்னாடைப் போர்த்தி அழகு பார்த்திருக்கிறார்.
இச்செய்தியை பார்த்த பின்னும் சொரனையற்று இருக்க முடியாத கருணாநிதி அவர்கள், சென்னையில் உள்ள பாரதி இளைஞர் சங்கத் தலைவருக்கு எழுதிய காட்டமான கடிதமே கருணாநிதியின் மேல் தசரதன் வகையாறாக்களுக்கு தீராத கோபத்தை உண்டு பண்ணிவிட்டது.
அக்கடிதத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் பார்ப்போம் :
தலைப்பு : பாரீஸ் பாரதி விழாவும் பங்கு கொள்ளாப் பன்னாடைகளும் சென்னையில் பொன்னாடையும்
"பொன்னாடைப் போர்த்தி கௌரவிக்கப் பட்டவர்களின் வரிசையில், நசீர் (நசீருதின்) என்ற ஒரு தமிழரின் பெயரும் நுழைக்கப் பட்டிருப்பது எங்கள் கவந்துள்ளது. செயலாளன் என்ற முறையில், என்னிடமுள்ள உறுப்பினர்கள் பட்டியலிலோ, நன்கொடை தந்தவர்களின் பட்டியலிலோ, அல்லது சீட்டு வாங்கிக் கொண்டு பார்வையாளராக வந்தவர்களின் பட்டியலிலோ மேற் கூறப்பட்ட நசீர் என்பவரின் பெயர் காணப்படவில்லை.
ஒரு வேளை, மலர்க்குழுவின் ஒரு அங்கத்தினரான நண்பர் தசரதன், பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழா அமைப்புக்குழுவின் அமைப்பாளர் என்ற பெயரை தானாகவே தமிழ்நாட்டில் சூட்டிகொண்டு, அகில உலக பாரதி விழாவினைப் பாரீசில் நடத்தப் போவதாக கூறியுள்ள புதிய கமிட்டியில் சேர்ந்துள்ள முதல் அங்கத்தினருக்கு, முன் கூட்டியே பொன்னாடை போர்த்தும் முயற்சியின் முதற்படியோ ? எனவும் நினைக்க வைக்கிறது.
அல்லது செய்தித் திரட்டியவர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட அச்சுப்பிழையோ? அல்லது செய்தியைத் தந்தவர்களின் சொந்த ஆசையோ என்றும் எண்ண வைக்கிறது.
மேற்கூறப்பட்ட நசீர் நண்பர் தசரதனோடு 8 ஆண்டுகளுக்கு முன் நடந்திய பாரீஸ் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தொகையையும், மாண்புமிகு எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் தமிழ் வளர்ச்சிக்காக தந்த, தமிழ் தட்டெழுத்து கருவியையும் சுருட்டிக் கொண்டு பிரெஞ்சு நாட்டை விட்டு மறைந்து போனவர் என்பதையும் இன்றும் மறக்காத பாரீஸ் தமிழர்களுக்கும், தியாக உணர்வோடு உழைத்த நல்லவர்களுக்கும் , தமிழ்நாட்டில் பொன்னாடைக்கும் சவத்தின் மீது போட்டு மூட உதவும் வெள்ளாடைக்கும் வித்தியாசமில்லா நிலை நிலவுகிறதோ என்ற எண்ணத்தை உண்டு பண்ணுகிறது. (நசீர் 1976ல் மேற்கூறிய பொருட்களோடு வெளிநாடு சென்றார்) .
அடுத்து, பாரீஸ் விட்டு, இந்தியாவுக்கு கிளம்பும் கடைசி நேரத்தில் பாரீஸ் நூற்றாண்டு விழாக்குழுவை இவ்வினாடியிலேயே கலைத்து விட வேண்டுமெனத் துடித்து, வேகமாக பேசிய நண்பர் தசரதன் சென்னையில் தந்த பேட்டிகளிலும், பாராட்டு விழாக்களிலும், பாரீஸ் பாரதி விழாக்குழுவின் அமைப்பாளர் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு, மேலும் பாரீசில் அகில உலக ரீதியில் நடத்தப் போவதாகக் கூறியுள்ளதின் மாற்றம் நீங்கள் போர்த்திய பொன்னாடையின் பளபளப்பில் ஏற்ப்பட்டதா? அல்லது அமைப்பாளர் என்று அவர் தம்பட்டம் அடித்துக் கொண்டபடியால், தந்த ஊக்கத்தினால் ஏற்பட்டதா? என்ற கேள்விகளும் எழச்செய்கின்றன.
எனவே செம்மறியாட்டின் மந்தையில் ஓநாய் புகுந்த கதையாக பாரீஸ் பாரதி நூற்றாண்டு அமைப்புக் குழுவில், பொன்னாடைக்கென புகுத்தப்பட்ட நசீர் அவர்களின் பெயரை நீக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்யக் கேட்டுக் கொள்வதோடு , நண்பர் தசரதன் அமைப்பாளர் என்ற பெயரில் எங்களைக் கலக்காமல் எதேதோ கூறிவருவதற்கு நாங்கள் போருப்பாளர்கள் அல்ல என்பதனை தெறிவித்து கொள்கின்றோம்."
இப்படி போவுதுங்க அந்தக் கடிதம்.
பழைய விஷயங்கள் தெறிந்தவர்களை கண்டு தசரதன் வகையறாக்கள் கிலி பிடித்து ஓடுவதும் அவர்களை தந்திரமாக இவ்விழாவிலிருந்து ஒதுக்குவதும் ஏன்? என்று அனேகமாக இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும் .
இவர்கள் ஒதிக்கினாலும் பரவாயில்லை நாங்களும் விழாவில் பங்கெடுக்கின்றோம் என்று மூன்றாவது செயற்குழு கூட்டத்திற்கு வந்த சிலரை தசரதன் கையாண்ட விதம் மேலும் அவரின் மேல் உள்ள நம்பகத்தன்மையை உடைத்தெறிந்து விட்டது. மூன்றாவது செயற்குழு கூட்டதிற்கு புதிதாக வந்தவர்களில் பேராசிரியர் திரு. லெபோ பெஞ்சமின் மிக முக்கியமானவர். பாரதி125பிரான்ஸ் அமைப்புக் குழுவால் அதிகாரப் பூர்வ அழைப்பை பெற்ற பிரான்ஸ் கம்பன் கழகத்தின் செயற்குழு உறுப்பினர். ஆனால் தமிழார்வலர், மெத்த படித்தவர், புதுவை தாகூர் கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். இவ்வளவு குறைகளுடைய ஒருவரை எப்படி உள்ளே விடுவது என்று தசரதன் யோசித்தரோ என்னவோ, முகத்தில் அடித்தார்போல் நேருக்கு நேராக உள்ளே வரக்கூடாது என்று அந்த வரலாற்று புகழ் வாய்ந்த வார்த்தைகளை உதிர்த்தார்.
அப்படியும் அந்த நிறைகுடம் தலும்பாமல் உணர்ச்சி வசப்படாமல் தலைகுனிந்து நின்றார். பலரின் வற்புறுதலுக்கு பிறகு கூட்டத்திற்கு வந்து உட்கார்ந்த அவரை கடைசிவரை யாரும் சட்டை செய்யவேயில்லை. அவருக்கு ஒரு பதவியை வாங்கிக் கொடுக்க எடுக்கப்பட்ட பலரின் முயற்சியும் தோல்லிவியிலேயே முடிந்தது. மூன்று முதல் பதவிகளை தமிழ்ச் சங்கமே வைத்துள்ளதால் வந்த பிரச்சனையை தவிர்க்கும் வகையில், அப்பதவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சொன்ன கம்பன் கழக தலைவர் கி.பாரதிதாசனை, பேராசிரியர் பன்னீர்செல்வமும் வழிமொழிந்தார். அப்போது வெடித்தது அவர்களின் கோரசான வீராவசனம். அந்த விராவசனத்தை பேசி தங்களது வீரத்தை நிரூபித்தவர்கள் யார் என்று உங்களுக்கெ தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களின் பதவிகள் பின்வருமாறு: தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர். அவர்கள் பேசிய விராவசனம் என்னவென்று சொல்லவில்லையே.... அதாவது அவர்கள் கவிஞர்.கி.பாரதிதாசனையும், பேராசிரியர் பன்னீர் செல்வத்தையும் பார்த்து கேட்டது "எல்லோரும் தேரில் ஏறிக்கொண்டால், தேரை யார் தள்ளுவது ?" என்பது தான் அந்தக் கேள்வி.
அதற்கு மேலும் அங்கு இருக்க மாட்டாமல் "தமிழை மொத்தமாக குத்தகை எடுத்திருக்கும் உங்களோடு எனக்கு இனி வேலை இல்லை" என்று நா தழதக்க கூறி வெளியேறிய பேராசிரியர் லெபோவைத் தடுக்க அங்கு உட்கார்ந்திருந்த எந்த பெருந்தகைக்கும் தைரியம் இல்லை. பெருந்தகைகள் வரிசையில் முக்கியமானவர்கள் "VIRTUEL பிரான்ஸ் சிவன் கோவில்" நிறுவனர் திரு. முருகையன், துங்கி நகர மன்ற உறுப்பினர் திரு. ஆலன் ஆனந்தன் , பிரான்ஸ் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திரு. பாரீஸ் பார்த்தசாரதி, பிரான்ஸ் கம்பன் கழக நிறுவனர் / தலைவர் கவிஞர். கி. பாரதிதாசன், பிரான்ஸ் கண்ணதாசன் கழக தலைவர் திரு.சிவபிரகாசம், மற்றும் சிலர்.
இப்படி பாரீஸ் பாரதி நூற்றாண்டு விழாவிலும் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவிலும் பலர் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட தசரதன் இந்த பாரதி125பிரான்ஸ் விழாவின் துவக்கத்திலேயே தன்னுடைய நிஜ முகத்தினை காட்ட துவங்கிவிட்டார். மேலும் இவர் இந்தியாவில் பத்திரிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ள செய்தி ஒன்றில் தான் தான் பாரீசில் கம்பன் விழா கொண்டாடுவதாகவும் சில ஆதரமற்ற செய்திகள் உலாவருகின்றன.
இவ்வளவு நடந்த பின்னும் ஒரு தமிழனுக்குக் கூட சூடோ, சுரனையோ வரவில்லையே என்று கவலைப்பட்ட நேரம் வந்தது திரு. கோவி. ஜெயராமனின் இலக்கிய விழாவில் பாரதியின் 125 ஆண்டு விழா அறிவிப்பு.
ஆறுதலாக இருந்தாலும் இப்புது விழாவினால் பிரான்ஸ் தமிழர்களிடையே பிறிவு தான் வலுக்குமேயன்றி ஒற்றுமை ஒருக்காலும் வரா, என்று நினைத்த மாத்திரம் மீண்டும் கவலையே மிஞ்சுகிறது.
ஒன்றுபட்ட பிரான்ஸ் தமிழர்களின் விழாவாக இந்த பாரதி 125 ஆண்டுக் கொண்டாட்டத்தை மாற்றுவதற்கு இருக்கும் ஒரே மாற்று வழி நம்பகத்தன்மை இழந்து நிற்கும் இப்போதைய தலைமை அவராகவே தன்னை விழாக் குழுவிலிருந்து விளக்கிக் கொள்ளவேண்டும் என்பதே அன்றி வேறேதும் இல்லை. பிரான்ஸ் இந்தியத் தமிழர் ஒற்றுமையைக் கருதியும், இளைஞர்களுக்கு இடம் கொடுத்தும், பிரான்சில் உறுவாகவிருக்கும் அனைத்து தமிழ் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு புது, இளரத்தம் பாய வழிவிடுவார் என நம்புகிறோம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ ?
*************************************

3 comments:

Anonymous said...

வணக்கம்,
வயதில் பெரியவர்களை அவமரிதை செய்தல் தமிழனின் நல்ல பண்பல்ல. அவர்களுக்குள்ள சுய மரியாதை கொடுத்து தங்களின் விமர்சனத்தை தொடரலாமே....

பாரதி125பிரான்சு விழாக் குழுவினர் said...

//அவர்களுக்குள்ள சுய மரியாதை கொடுத்து தங்களின் விமர்சனத்தை தொடரலாமே....//

இடித்துரைத்தமைக்கு மிக்க நன்றி. அப்படியே செய்கிறேன். அவமரியாதை செய்திருப்பின் மன்னிக்கவும்.

Anonymous said...

பார் புகழும் பாரதிக்கு விழா எடுப்பதில் இவ்வளவு பிரைச்சினைகளா. கடல் கடந்து சென்றாலும் தமிழன் மடல் மூலம் போர் புரிவது நம் இனத்துக்கு மட்டுமே
சாத்தியம். ஆசையை அழி என்று சொன்னான் புத்தன். அந்த ஆசையால்
தான் அனைத்துப் பிரைச்சினைகலுமே.
விழா எடுப்பது என்பது அனைவரும்
ஒன்று சேர்ந்து ஒவ்வொருவரும் பங்கு
கொண்டு சிறப்பாக நடந்தேற வழிவகுக்க வேண்டும். பணத்தாசை
கொண்டவர் விழா நடத்தினால் பிரச்சினை வருவது இயல்பு. அவரே
ஒழுங்கான ஒரு குழு அமைத்து அனைவருக்கும் தகுதியான பொறுப்புக்கள் கொடுத்து விழா முடிவில் வரவு செலவு கணக்கை உறுப்பினர் மற்றும் மக்கள்முன் வைக்க தயங்காமல் இருப்பாரென்றால்
பிரச்சினை வரவாய்ப்பில்லை.
அதுவே இலக்கிய விழாவாக இருப்பின் அவருக்கு இலக்கியத்தில்
ஈடுபாடும்,இலக்கியசிந்தனையும் இருக்க வேண்டியது இன்றியமையாதது. அப்படியில்லாத
பட்சத்தில் அதை புரிந்துகொண்டு தான் விலகி மற்றவர்க்கு இடம் கொடுக்கவேண்டும். அப்படி செய்யாதிருப்பாரேயானால் கண்டிப்பாக
எதையோ, எந்த பலனையோ எதிர்
பார்த்து தன் சொந்த சுயநலத்திற்காக
செய்கிறார் என்பதை உள்ளங்கை
நெல்லிக்கனி போல் உணர்தல் வேண்டும். பதவி மோகம் மற்றும்
பந்தா பேர்வழிகளும் இதில் அடங்கும்.
எனவே அது போன்றவர்களை வெளிச்சம் போட்டுக்காட்டி, ஆர்வமிக்க
அறிஞர்களை அவர்கள் இளைஞர்களாய் இருந்தாலும் விழா
எடுக்கச் செய்யவேண்டும். கடந்த சில
தினங்களாக தங்கள் கருத்த்க்களை
படித்த நான் தாங்கள் அந்த முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளீர்கள்
என்பதாக என்னுகிறேன்.எனவே விழா
நடந்தேற வழி செய்து பாரதி பெயரையும் பாரிசு பெயரையும் காப்பீராக.