தில்லுமுள்ளுகளும்? தள்ளுமுள்ளுகளும்?-2
ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து விழா எடுத்து புகழ்? சேர்க்கும் குள்ளநரிக் கூட்டம் ஒரு புறம். தமிழ் மொழிக்கு எதாவது செய்ய வெண்டும் என்று ஏதாவது ஒரு வாய்ப்பினை தேடும் பொழைக்கத்தெறியாத மற்றோருகூட்டம். எதுவாக இருந்தாலும் தனக்கு தனியாக என்ன இலாபம் கிடைக்குமுன்னு அலையும் வேறொரு ஈனக்கூட்டம். இவர்கள் எல்லோருக்கும் நல்ல புள்ளையா ஜால்ரா பொட்டு துண்டு போத்திக்க துடிக்கும் ஒரு பெரும் கூட்டம். இப்படி பிரான்ஸில் வாழும் தமிழ் பேசும் இந்தியப் பொருளாதார அகதிகளை பிரித்து விடமுடியும். இதில் தமிழ் பேசுவதையே கேவலமாக எண்ணும் பெரியோர்களை நான் சேர்க்கவில்லை.
தமிழர்களின் சங்கங்கள் என்று பார்த்தால் இன்னும் பல சுவாரசியமான விவரங்கள் தெறியவரும். கணவன் மற்றும் மனைவி மட்டும் சேர்ந்து உருவாக்கி உள்ள சங்கங்கள் உள்ளன. வெரும் மூன்று பேர் மட்டும் சேர்ந்து ஒரு சங்கம் உருவாக்கி வெற்றிகரமாக வேறு உருப்பினர்களைக் கூட சேர்க்காமல் நடக்கின்ற கொடுமையும் உள்ளது. மற்றபடி பல "அவார்டு" மற்றும் "ஷீல்டு" கொடுக்கும் சங்கங்கள் உள்ளன. அப்படியான சங்கங்களில் தலைவரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் டம்மிகள். டம்மிகள் வாயைத் திறந்தால் உடனே சங்கத்திலிருந்து நீக்கப்படுவர். பல பஜனைப் பாடும் சங்கங்கள் ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் வித்தியாசம் தெறியாத தலைவர்களால் நடத்தப் படுவதும் உண்டு. சாமியார்களை வைத்து காசு பண்ண பார்க்கும் சங்கங்கள், இலைமறைவு காய்மறைவாக நடத்தப்படும் சாதி சங்கங்களும் உண்டு (முதலியார் மற்றும் வன்னியர்). கோவில் பெயர் சொல்லி அர்ச்சனை தட்டு விற்று தமிழ் வளர்க்கும் சங்கங்களும் உண்டு. இருபத்தைந்து வருடங்கள் தமிழ் பள்ளிகூடம் நடத்தி காணாமல் போனவர்களும் உண்டு. பிரான்ஸில் வாழும் புதுவை தலித்துக்களுகென்று ஒரு கூட்டமைப்பு இல்லாதது போலவே தோன்றுகிறது. சரி இவ்வளவு பேரும் சேர்ந்து பாரதிக்கு ஒரு விழா எடுக்க முற்பட்டால் விளைவு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கும் போது அதனை செய்து முடிக்க தைரியாமாக முற்பட்டது பிரான்ஸ் தமிழ் சங்கம்.
தொடரும்