தமிழ்ப் பணி? 2
ஆமாங்க பின்ன எப்படி தாங்க தமிழ்ப் பணி செய்வது? நம்ம இசை ஞானி இளையராஜா செய்வது போல் தமிழ்ப் பணி செய்யவேண்டும். இன்னாங்க அது அவர் திரைப்படத்திற்கு இசை தானே போடுறதா சொன்னாங்க, தமிழ்ப் பணியெல்லாம் எப்படின்னு? தானே பார்க்கின்றீர்கள். சொல்லிட்டாப் போச்சி.
சுத்தி சுத்தி தமிழ், தமிழன் என்றாலே அடுத்து வருவது பெரியார் அவர்கள் தான் இல்லையா? அதையும் விட தமிழ் எழுத்துச்சீர்மை என்று சொல்லே 1935 ஆம் ஆண்டு பெரியார் மும்மொழிந்ததிலிருந்து துவங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதாவது "லை" என்பதை முன்பு "ல" என்ற எழுத்துடன் ஒரு கொம்பை சேர்த்து எழுதும் வழக்கத்தை மாற்றி இப்போதுள்ள "லை"யை நமக்களித்தவர் பெரியார். ஆனால் பிராமண்ய ஆதிக்க சக்திகள் அதை ஏற்காமல் இருந்ததற்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணத்திற்கு கெ.பாலச்சந்தர் எடுத்த வானமே எல்லை படத்தின் பெயரை அவர் பழைய கொம்பு போட்ட "லை" யுடன் எழுதி தன்னுடைய பெரியாரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார். பாலச்சந்தர் அவருடைய இன ஒற்றுமையை எப்படி காண்பிக்கிறார் என்று பாசிட்டிவ்வாக எடுத்துக்க கொள்ளலாம். துக்ளக்கும் அப்படியே.
நம்முடைய இளயராஜாவோ தன் தமிழின உணர்வை காண்பிக்க என்ன செய்திருக்கவேண்டும். மாபெரும் பாக்கியமாக கருதி பெரியாரின் திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கவேண்டும். அனால் அப்படி சேய்யாதது மட்டுமல்லாமல் அதற்கு அவர் சொன்ன காரணம் "என் ஆன்மீகக் கொள்கைகளுக்கு முரணானது பெரியாரின் நாத்திகவாதம். எனவே என்னால் இசையமைக்க முடியாது" என்று திருவாய் மொழிந்தார். அதாவது இளையராஜவுக்கு, பெரியார் என்றால் ஒரு நாத்திகவாதி, ஒரு கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமெ தெரிந்திக்கிறது என்றால் இளையராஜவின் சமூகப் பார்வையில் உள்ள ஊனத்தின் அளவை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இளையராஜாவின் மகள் தமிழ் சினிமா பாடலகள் பாடும் போது அப்பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதிவைத்து தான் பாடுவார் என்று தெரிந்தும் அதைப்பற்றி யாராவது கேட்டோமா? அல்லது இளையராஜாவின் பால்ய நண்பர் , "என் இனிய தமிழ் மக்களே"ன்னு வழிவாரே, அவரது ஒரே மகன், தமிழகத்தில் நடந்த ஒரு மாபெரும் மேடை நிகழ்ச்சியின் போது கலைஞருக்கு முன்னாலேயே தன்னால் தமிழில் பேச முடியாது என்று சொல்லி, அதே இனிய தமிழ் மக்களின் மூகத்தில் கரியை பூசியதைப் பற்றி இப்பொது பேசப் போவதுமில்லை.
ஆனால் வைகைக் கரை மணலில் உட்கார்ந்து பாடப்பட்ட மாணிக்க வாசகரின் திருவாசாகத்தை இசைவடிவம் கொடுத்த இளையராஜாவுக்கு ஏன் தமிழ்நாட்டில் ஒரு இசைக் கலஞன் கூட கிடைக்கவில்லை. இத்துணை ஆண்டுகளுக்கு கழிந்த பிறகும் ஒரு தமிழன் பாடிய பாட்டிற்கான இவரின் சிம்பொனி இசையை வாசிக்க தமிழ் வாத்தியக் கலஞர்கள் கிடைக்காத போன ரகசியம் என்னவோ?
இன்றைக்கு தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமான சிலரில், மிக மிக்கியமான தலைவராகிய பெரியாரின் படத்திற்கு இளையராஜாவால் இசையமைக்க முடியாவிட்டால், பின் எப்போது தமிழுக்கு தொண்டு செய்யப் போகிறார். எவ்வளவு முறை முயன்றும் அவரது சாதியின் காரணத்தால் சங்கரமடத்தின் உள்ளே விடாமலும், தமிழை "நீச பாஷை" என்று கூறி, ஒவ்வோரு முறையும் தமிழ் பேசிய பின்பும் , நீரில் குளித்து தீட்டை போக்கிக் கொள்ளும் சங்கராச்சாரி பேசும் ஸ்ம்கிருதம் தான் இளையராஜாவின் தாய்மொழியோ ?
நாலு காசு சேர்ந்து விட்டாலோ, நாலு எழுத்து படித்து விட்டாலோ தமிழர்காளாகிய நாம், முதலில் செய்வது நம்மை தமிழர்களாக இனம் காட்டிக் கொள்ளாமல் இருப்பது. தமிழில் பேசுவதையே கேவலமாக எண்ணுவது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எதோ தாங்கள் வெள்ளைக் காரனுக்கே பிறந்தது போல் நினைத்துக் கொண்டு நடப்பது. சரி அது போகட்டும்.
சமஸ்கிருத வல்லுனராகவும் சென்னை மாகாண முதல்வாராகவும் இருந்த பனகல் அரசர் என்ன செய்தார் என்று நம்ம இளையராஜாவுக்கு சொல்வோமா? சுமார் எண்பது வருடத்திற்கு முன்னால் சென்னை மாகாணத்தில் நிலவிய ஒரு சட்டத்தை திருத்தம் செய்ததாலேயே அவரது பெயர் காலத்தை வென்று நிற்கிறது. அப்படி என்னாங்க ஒரு சட்டம்? ஆமாங்க அப்படி ஒரு சட்டம் அது. அதாவது எண்பது வருடத்திற்கு முன்னால் மருத்துவக் கல்லூரியில் நீங்கள் சேரவேண்டும் என்றால், இப்பொது போலவே நுழைவுத்தேற்வு எழுதித்தான் சேரவேண்டும் . யோவ் அதுல உனக்கு இன்னாய்யா பிரெச்சனை தானே கேட்குறீங்க ? அதுல தாங்க பிரெச்சனையே. நுழைவுத்தேர்வுல ஒரு பாடம் சம்ஸ்கிருதம். அதுலேயும் பாஸ் பண்ணாத்தான் மருத்துவம் படிக்கலாம். அப்ப எவனெவன் மருத்துவம் படிச்சிருப்பான்னு யோசிக்க முடியுதுங்களா ?
இதை கவனிச்ச பனகல் அரசர், ஒரு சின்ன சட்ட திருத்தம் கொண்டுவந்தார். வச்சாரு பாருங்க சம்ஸ்கிருதத்திற்கு ஒரு ஆப்பு. நுழைவுத் தேர்வுலேர்ந்து சம்ஸ்கிருதத்தை நீக்கினார். அப்போதிலிருந்து தான் தமிழகத்தில் தமிழன் கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆரம்பித்தான். பனகல் அரசர் அன்னறைக்கு யோசிக்காமல் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் எச்சிலையை இளையராஜாவைப் போல் நக்கிக்கொண்டு இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் தமிழனின் நிலை? அதோகதிதான். அர்ச்சனை தட்டு வாங்கினாத்தான் ஆப்ரேஷன்னு சொல்லியிருப்பானுங்க. இல்லன்னா காயாத்ரி மந்திரத்தை கண்ணைமூடிகிட்டு சொன்னால் தான் கண்ணாப்பிரேஷன்னு சொன்னாலும் சொல்லியிருப்பானுங்க.
தொண்டுன்னா, இப்படி செய்யுனும் தமிழுக்கு தொண்டு, தமிழன் தலைநிமிர்ந்து நிக்கிற மாதிரி. வேடந்தாங்கலுக்கு தண்ணியைத் தேடிவரும் வெளிநாட்டுப் பறைவகள் போல வெளிநாடுகளுக்கு தண்ணி தேடி வரும் அரசியல்வாதிகளுக்கும் விஐபிக்களுக்கும் வேடந்தாங்கலாக இருப்பது இல்லை தமிழ்த்தொண்டு.
என்றைக்காவது ஒரு நாள் இளையராஜா தமிழுக்கு திரும்பக் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
தஞ்சாவூர்ல பார்பனர்களின் பூநூலை அறுத்ததிற்கே மூக்கை சிந்தின எங்க "பட்டிமன்ற நட்டுவாங்க மேதை"க்கு இந்த பனகல் அரசர் போட்ட சட்டம் தெரிஞ்சவுடனே பார்பனர்களின் பொழப்பிலேயே மண்ணைப் போட்டுடாங்களேன்னு, ஓஓன்னு அழப்போறாரு பாருங்க...ஹி ஹி
டுபாகூர் தமிழ்ப் பணி தொடரும்...
2 comments:
தங்கள் தளத்தை ஆர்வமுடன் படித்து வருகிறேன். இப்படி ஒரு தளம் தேவைதான். தமிழுக்கு இச்சங்கங்கள் ஆற்றி வரும் 'அளப்பரிய சேவையை' மக்களுக்குத் துகில் உரித்துக் காட்டிவரும் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
வாய்மையே வெல்லும்! வெல்லட்டும்!
பாரதி 125 ஆம் ஆண்டு விழாக் குழவில் (3 -ஆம் அமாவில்) பார்வையாளனாகக் கலந்துகொள்ள அடியேன் வந்ததும் உண்மை, அங்கே அனைவரும் அடித்த கூத்தைக் கண்டு வருத்தம் அடைந்ததும் உண்மை!
பேராசிரியர் சக்திப்புயல் எழுப்பிய நியாயமான கேள்விக்கு (பாரதி விழாவில் தமிறிந்தவர்களுக்கு, தமிழ் அறிஞர்களுக்கு ஏன் இடம் தரவில்லை...?) பதில் இல்லை. விவாதங்களும் ஆக்க பூர்வமானதாகத் தோன்றவில்லை.
பொன்னான நேரத்தை இது போன்ற புண்ணாக்கு கூட்டங்களுக்கு விரயமாக்க விரும்பாமலும் மனம் வெதும்பியும்தான்
'முத்தமிழையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் இத்தனை தமிழ் அறிஞர்கள் இங்கே இருக்கையில் தமிழறியாத் தறுதலை எனக்கு இங்கென்ன வேலை "
என்று பொங்கி உரைத்து வெளியேறினேன்.
என் சொற்களின் முழப்பொருளையும் உணர்ந்து கொண்டவர்கள் ஒரு சிலரே
(அவர்களுள் பேராசிரியர் சக்திவேல், திரு பொன்னரசு முதலியவர்களுடன் தாங்களும் அடக்கம். பிறர்க்கு 1 விழுக்காடு கூட விளங்கவில்லை, விளங்காது என்பதை நானறிவேன்!).
பின்னொரு நாள் தசரதன், பார்த்தசாரதி இருவரும் வேறோரு விழாவில் சந்தித்த போது எனக்குச் சில சப்பைக் கட்டு விளக்கங்கள் அளித்து இனி எல்லாக் கூட்டங்களுக்கும் அடியேன் வரலாமென்றும் அவர்களோடு சேர்ந்து விழாவில் பணியாற்றலாம் என்றும் வெகு தாராளமாகக் கூறினார்கள்.
பாரதிக்குக் கடைசியில் காக்கைகள்தாம் விழா எடுக்கும் என்பதை அறிந்துதான 'காக்கை குருவி எங்கள் ஜாதி' எனப் பாடினார் போலும் மகாகவி!
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
வணக்கம்!
பாரதி விழாவின் போது சில சங்கங்களின் முகமூடியை கிழித்து அவர்களின் உண்மையான அடையாளத்தை காட்டியுள்ளீர். ஆனால் கம்பன் கழகத்தை அதாவது அதன் தலைவரை ஏன் படம் பிடித்து காட்டவில்லை. பாரதி 125 விழாவின்; (தசரதன் தலையில் ஆன) செயற்குழவில் பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களே பதவி (தலைவர், செயலர், கணக்காளர்) வகிப்பதாக குற்றம் சாட்டிய பாரதிதாசன் அவர்கள் தனக்கு மலர்க் குழுவிலும், செயற் குழுவிலும் தானே வகிப்பது சரியா? ஏன் அவர் கழகத்தில் வேறு யாரும் இல்லையா? செயற் குழுவிற்கு வந்திருந்த லெபோவையும், செயராமனையும் மறந்து விட்டரா! சங்கத்தில் அவர்மட்டும்தான் உள்ளாரா? தமிழ்க்கு தொண்டு செய்ய வருகிறார்களா! அல்லது தமிழை வைத்து இவர்கள் வளர்வதற்கு வருகிறார்களா! வெட்கக்கேடு இதையெலாம் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையே என்பது வருத்தமே! தேவையென்றால் இன்னும் வளரும்.
உண்மை விளம்பி
கருணாகரத் தொண்டைமான்
Post a Comment