பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்
1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.
தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் "டயர் மடையன்" போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.
அதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.
"மாட்சிமை தாங்கிய" கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட "தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு" சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.
பாரதியார், ஏதோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.
கடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.
மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.
அப்பாட்டு "அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே....இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ....உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்பதாகும்.
இந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம 'சத்திய ஆவேசம்' கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.
8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், 'நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை' என்று எழுதினார்.
1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.
பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், 'ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்' என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.
2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே "தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி" என்று எழுதியதில்தான் 'இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட சாதித்திமிருக்கான' விதை இருக்கிறது.
3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?
4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா?
5) "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது?
6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமாகின்றது. 'ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்' என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை "வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்" எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா?
இல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.
1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை "பெருந்தன்மை" எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை "டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்" என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.
தன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே "மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை" என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார்? பாரதிக்கு 'அக்கிரகாரம் மட்டுமே தேசம்' என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.
வெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் "ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது" எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி? 'நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே' எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது?
7) "சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்" என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே!. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார்? சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்!
எவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.
8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய "ஈனப் பிறவி", "கொழுப்பு" எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.
"பாரதிதாசன், பாரதியை 'அய்யர்' என்று மரியாதையுடன் (!) அழைத்தார்" என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, 'அய்யர்' என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.
9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.
10) 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' எனத் தலித் மக்களை 'ஈனர்'களாய்ப் பார்த்தவர்தானே பாரதி?
வேறொரு இடத்திலே 'வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்' எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?
11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் "அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்" என்று கோரஸ் பாடுவது வழக்கம்.
இதற்கு மதிமாறன் "பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால்? பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்" எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.
12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் "இந்தியா என்பது இந்துக்கள் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்களின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்" என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்?
முஸ்லிம்களை "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.
சிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட "வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே" என்று பாடி வைத்து, குரானை 'பேதை' நூல் என்று சொல்லியவர்தான்.
13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் "மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்" என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.
முன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.." என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.
துவேஷத்துக்கு ஓர் எல்லையில்லையா? மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.
பாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.
கேள்வி:- "இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது?"
பதில்:- "பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது"
மேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.
14) மலர்மன்னனின் பார்வையில் 'பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்'. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது "அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது" என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.
ஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.
இதே பெரியார்(?)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட 'பெட்டைப் புலம்பல்' என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் "ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து" என்றும், "பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்" என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.
பெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை? எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா?
'சிறந்த பெண்மணி' எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா?
"(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்" என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.
15) 'வாழ்க நீ எம்மான்' எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த 'ஒத்துழையாமை' தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் 'அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்' வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா? அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா?
16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாரா?
சாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா?
17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா?
சாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் அடங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா?
தமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.
வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.
பாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த 'இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்' சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.
'நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்?' என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.
"திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.
ஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்."

18) பின்னிணைப்பு:
****************
கடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,
His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.

I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************
சான்றாதார நூல்கள்:
1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்
************************************
vellaram@yahoo.com
No comments:
Post a Comment